நாளிதழ்களில் இன்று: '2030இல் இந்தியாவில் உருவாகும் திடக்கழிவுகள் 4 மடங்காகும்'
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
திடக் கழிவு மேலாண்மை தொடர்பாக அரசிடம் முறையான திட்டமிடல் இல்லாதது குறித்து டெல்லியில் இருந்து வெளியாகும் ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் உருவாகும் திடக்கழிவுகளின் அளவு 2030இல், தற்போதைய அளவைவிட நான்கு மடங்காகும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட்டுள்ளதை அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்தபோது, 'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என்றும், 'காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாடு வளரவில்லை, ஒரு குடும்பம்தான் வளர்ந்தது,' என்றும் பிரதமர் நரேந்திர மோதி பேசியதை தினமணி முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மோதியின் உரை, தேர்தல் பிரசாரம் போல் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய செய்தியும் தினமணியில் வெளியாகியுள்ளது .

தினத்தந்தி
பயணிகள் நெரிசலை சமாளிக்க கோடை விடுமுறையின்போது 500 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இந்த ரயில்கள் இயக்கப்படும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும், பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதன்மூலம் 20,592 பேருக்கு எச்.ஐ.வி பரவியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ரத்தம் மூலம் எச்.ஐ.வி பரவியதில், இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 6ஆம் இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












