வாதம் விவாதம்: வென்றதா தர்மயுத்தம்? - என்ன நினைக்கிறார்கள் மக்கள்

சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா சமாதி முன்பு ஓ.பன்னீர்செல்வம் தியானம் மேற்கொண்டு நேற்றோடு ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் இது தொடர்பாக, 'தர்மயுத்தம்' என்று கூறிக்கொண்ட போராட்டத்தில் ஓ.பி.எஸ் வெற்றி பெற்றாரா? என்று பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

சக்தி சரவணன், "இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி அரசமைப்பு முறையில், ஓர் மாநிலத்தின் அரசியல் திருப்பம், மாநிலக் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் சரிவுகள் ஒவ்வொன்றும் தேசியக் கட்சிகளின் ஆளுமை, உள்ளீடு இல்லாமல் நிகழ்வது என்பது இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் அரிது என்னும் பரந்த அரசியல் பார்வையில் அ.இ.அ.தி.மு.க உட்கட்சி உடைப்புகளை நாம் ஆராய வேண்டும். கட்சியின் ஆளுமையைக் கைப்பற்றும் நோக்கில் மூன்று அணிகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்பட்டாலும், இவர்களது கட்சியை விடுத்துத் தனித்த அல்லது பிற காட்சியுடன் ஆன அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியது என்பதை உணர்ந்ததால்தான் இன்னமும் ஓர் முடிவு எட்டப்படாமல் கட்சியின் நிழலை விட்டு நகர்வதற்கு எவரொருவரும் தயக்கம் காட்டுகின்றனர்" என்கிறார்.

"அயோக்கியத்தனதின் மறுபெயர் இந்த தர்மயுத்தம். இன்றைய தலைமுறையினர் தர்மயுத்தம் என்பதின் பொருள் என்ன என்பதை தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள்" என்கிறார் ரமேஷ் சுப்பிரமணி.

சுந்தரம் சின்னுசாமி, "எது எப்படியோ... இதுவரை சசி குடும்பம் பதவிக்கு வர முடியாமல் போனதுக்கு புள்ளையார் சுழி போட்டவர் அவர்தான்" என்கிறார்.

இந்த தர்மயுத்தம் வெற்றி பெறவில்லை என்கிறார் ஜெ.எம் ரஃபீக்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: