You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே இந்தியாவின் வளம் சிக்கியுள்ளது”
வளம் மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் என்கிறது ஓர் ஆய்வு. நிதர்சனத்தில் இந்தியர்களின் வாழ்க்கைதரம் மேம்பட்டிருக்கிறதா? பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே பணம் குவிந்து கிடக்கிறதா?
இந்த கேள்விளை பிபிசி தமிழ் நேயர்களிடம் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்
அவர்கள் தங்களின் சமூக வலைதங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவற்றில் பதவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.
கரேஜா பாலசுப்பிரமணியன் என்கிற ஃபேஸ்புக் நேயர், “எதை வைத்து வளமான நாடு என்று ஆய்வு செய்கிறார்களோ தெரியவில்லை. உடல் பாகங்களில் ஒரு பக்கம் மட்டும் சத்து சேர்ந்து கொண்டே போனால் அது வீக்கம். ஆரோக்கியம் அல்ல. அது போல ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாத நாடாக இந்தியா எப்போது மாறுகிறதோ அப்போதுதான் வளமான நாடு” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதில் பாதிக்கப்படுவது ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் என்று மணிகண்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஸ்மார்ட் ஷாகுல் என்ற நேயர், “வளம் என்று சொல்வது இயற்கை வளத்தையா? அல்லது இயந்திர வளத்தையா? பெருகி வரும் இயந்திர உலகத்தில் இயந்திரத்தை மட்டுமே வளமாக நினைத்து இவ்வுலகம் சென்று கொண்டு இருக்கிறது! இயற்கை வளத்தில் பார்த்தால் இந்தியா பின்தங்கிய நாடாகி விட்டது... அனைத்து வளங்களையும் அழித்து, அந்த இடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதும், அந்த நிறுவனம் மூலமாக ஒரு சில இந்தியர்கள் பயன்பெறுவதுமே இன்றைய வளம் என்று கருதப்படுகிறது!... என்கிறார்
கல்வியறிவில், வறுமை, வேலைவாய்ப்பின்மை, நலவாழ்வு சீர்கேடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பது ரங்கசாமி குமரனின் டுவிட்டர் பதிவாகும்.
புலிவாலாம் பாஷா என்கிற ஃபேஸ்புக் நேயர், “அரசியல்வாதிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் மட்டும் தான் இந்தியா வளம்மிக்க நாடு ஆனால், நாட்டு மக்களுக்கு வறுமை மிக்க நாடாகதான் இந்தியா திகழ்கிறது என்பதில் சிறிது அளவும் சந்தேகம் இல்லை!!! என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.
ஜார்ஜ் பீட்டர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், அரசியல்வாதிகள் வளமாகத்தான் இருக்கிறார்கள் என்கிறார்.
வெற்றி என்கிற நேயர், இந்தியாவின் வளங்களின் பெருமளவு சுரண்டிஎடுக்கப்பட்டுவிட்டன... வளமுள்ள நாடக இருந்தால் அதன் குடிமக்கள் ஏன் எலிக்கறி தின்னவேண்டும்... என்கிறார்.
வளம் பற்றிய இந்த கேள்வியை பற்றி சுப்பு ராஜ் நேயர், அது 1% தொழிலதிபர்கள் 73% சொத்து வைத்திருக்கிறார்களே அவர்களுக்கு பொருந்தும் என்கிறார்.
அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் தன்னிறைவு பெறவில்லையே என்று நல்லூரான் என்ற நேயர் டுவிட் செய்துள்ளார்.
பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே இந்த நாட்டின் வளங்கள் மாட்டிக்கொண்டுள்ளன என்ற கருத்தை பதிவு செய்துள்ளார் அப்துல் வாஹாப் என்ற நேயர்.
வேலாயுதம் கந்தசாமி என்ற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், எந்த வளமோ? என்று சுருக்கமான பதிவை இட்டு சிந்திக்க அழைத்துள்ளார்.
பணக்காரன்கிட்ட மட்டும்தான் பணம் இருக்கு என்று பதிவிட்டுள்ளார் முகாவி செல்வன்.
முகாவி செல்வன் பதிவிட்ட கருத்துக்கு ஒத்த கருத்தை பதிவிட்டுள்ள நிவித் குமார், அரசியல்வாதிகள் மற்றும் பெரும்செல்வந்தர்களிடம் மட்டுமே பணம் அதிகமாக உள்ளது.... என்கிறார்.
பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே பணம் குவிந்து கிடக்கிறது என்று ஹெம் கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் முன்று விதமான மக்கள் இருப்பதை விளக்கி வளம் யாரிடம் குவிந்துள்ளது என்பதை விளக்குகிறார் ஆர்.எஸ். அருண்.
Theerthes waran
உயர்ந்துள்ள வாழ்கை தரம் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்து உள்ளதா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்பது தீர்திஸ் வாரனின் டுவிட்டர் கருத்தாகும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்