நாளிதழ்களில் இன்று: பொதுத் துறை வங்கிகளுக்கு ரூபாய் 89,139 கோடி மூலதனம்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
வாராக்கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு 8,139 கோடி ரூபாய் மூலதனம் செலுத்தப்படும் என்றும், வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களும் நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
வங்கிகள் பெரிய தொகைகளை கடனாகக் கொடுக்க கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

தினத்தந்தி

தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் தாங்கள் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்துள்ள அதே நேரத்தில் பல கோடி ரூபாய் பணத்தை சமூக நலத் திட்டங்களுக்கு அரசு செலவிடுவதால், நாட்டு நலன் மற்றும் குடிமக்களின் அந்தரங்க உரிமை ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ஆதார் எண் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மக்களின் தனிப்பட்ட செயல்களை அறிய ஆதார் பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தினமணி
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரின் தகுதி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்பேரில் ஒப்புதல் வழங்கியுள்ளது குறித்து தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

பட மூலாதாரம், AFP
இதை ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மத்திய பாரதிய ஜனதா அரசின் நடவடிக்கை என்றே கருத வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது .

பிற செய்திகள்
- கொக்கி செய்யும் காகங்கள்: விலங்குகளின் பேரரசில் புதிய தொழில்நுட்ப பரிணாமம்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழாத விஜயேந்திரருக்கு குவியும் எதிர்ப்பு
- இலங்கையில் தமிழ் பள்ளி முதல்வரை காலில் விழவைத்த மாகாண முதல்வர்
- 'பத்மாவத்' படம் குறித்து ராஜபுத்திரர்கள் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












