ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பாலியல் குற்றவாளிக்கு சிறை

லாரி நாசர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, லாரி நாசர்

ஒலிம்பிக் வீராங்கனைகள் உள்பட பல பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல் நடத்திய அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் மருத்துவர் லாரி நாசருக்கு 40 முதல் 175 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட 160 பெண்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

Presentational grey line

'முகாபே குடும்பம் அமைதியாக விடப்படும்'

முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மனைவி கிரேஸ் முகாபேவுடன் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே

பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜிப்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் குடும்பம் அமைதியாக விடப்படும் என்று புதிய அதிபர் எமர்சன் மனங்காக்வா பிபிசியிடம் கூறியுள்ளார். 37 ஆண்டுகள் பதவியில் இருந்த முகாபேவின் குடும்பம் ஈடுபட்ட குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு மக்கள் பலரும் நினைத்தனர்.

Presentational grey line

ரஷ்ய தலையீடு: டிரம்பிடம் விசாரணை

டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தாம் நேரடியாக விசாரிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

Presentational grey line

ஆப்கானிஸ்தானில் பணிகளை நிறுத்திய தொண்டு நிறுவனம்

சேவ் தி சில்ட்ரன்

பட மூலாதாரம், AFP

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்திருக்கும் தங்கள் அலுவலகம் மீது நடத்தப்பட்டுள்ள தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பிறகு, அந்நாட்டில் தங்களது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக குழந்தைகளுக்கான சர்வதேச தொண்டு நிறுவனமான 'சேவ் தி சில்ட்ரன்' கூறியுள்ளது. ஐ.எஸ் அமைப்பு, புதனன்று, நடத்திய அந்தத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.

Presentational grey line

எகிப்து: பின் வாங்கிய மனித உரிமை செயல்பாட்டாளர்

காலீத் அலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலீத் அலி

எகிப்து நாட்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மனித உரிமைகள் வழக்கறிஞரான காலீத் அலி விலகியுள்ளார். தமது ஆதரவாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :