You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நீதி விரைந்து கிடைக்க கட்டப் பஞ்சாயத்தை அனுமதிக்கலாமா...?"
போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை ஏன் தனியார்மயமாக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது தொடர்பாக பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.
"அரசுடைமையா, தனியார்மயமா என்பதல்ல பிரச்சனை, உரிய ஊதியமும் கொள்ளையடிக்கப் பட்ட வைப்பு நிதியை திரும்பச் செலுத்த வேண்டும் என்பதே ஆகும். நீதிபதி வழக்கை திசை திருப்புகிறார்." என்பது சரோஜா பாலசுப்ரமணியனின் கருத்து.
பென்னி ஸ்டீஃபன் பெஞ்சமின் சொல்கிறார், "தாராளமாக செய்யலாம் ஏனெனில் இலவசம் என்ற பெயரில் வரிப்பணம் வீணாவதை தடுக்கலாம் அடுத்து ஊழல் அரசியல்வாதிகள் திருடுவதை தடுக்கலாம் அடுத்து ஜால்ரா அதிகாரிகளின் அத்துமீறலுக்கு அணை கட்டலாம் ஊதாரியாய் திரியும் உருப்படாத ஆளுங்கட்சி சங்க அடிவருடிகளை அடியோடு ஒழித்து உண்மையாய் உழைப்பவர்க்கு தகுந்த அங்கீகாரம் அளிக்க இதுவே சிறந்த தருணம்"
புலிவலம் பாட்ஷா, " தனியார் மயமாக அனைத்தையும் மாற்றி விட்டால் அரசாங்கம் என்பது எதற்காக இருக்கிறது?" என்று கேள்வி எழுப்புகிறார்.
"வழக்குகளை விரைந்து முடிக்க நீதி துறையை தனியார்மயமாக்கலாமா ? . உழைத்தவனுக்கு ஊதியம் கேட்பது தவறா? . லாபம் தர வேண்டிய துறையை வேண்டுமே நஷ்டமடைய செய்து விட்டு அந்த துறையை தனியார்க்கு கொடுக்க சொன்னால் நியாயமா?" என்கிறார் முத்துசெல்வம்.
வெங்கடாஜலபதி, "அரசு தனியார்மயமாக்காது காரணம் பள்ளி குழந்தைகளுக்கும் மற்றும் பலருக்கும் வழங்கப்படும் இலவசபஸ் பாஸ்வழங்க இயலாது,தனியார் மயமாக்கப்பட்டால் தனியாருக்கு மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டியிருக்கும் (அ)இலவச பாஸ் கணக்கிலும் சந்தேகம் வரும்?" என்கிறார்.
"அரசுத்துறைகள் எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்துவிடுங்கள் நாட்டில் ஊழலும் ஒழிந்துவிடும் இது போன்று அரசுக்கு ஆதரவாக பேசவேண்டியதும் இல்லை" என்பது வெற்றியின் வாதம்.
ராபர்ட் சொல்கிறார், "அரசாங்கத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது"
"தனியார் மயமாக்கி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்வதுதான் சிறந்தது.." என்கிறார் மாயகிருஷ்ணன்.
கங்காதர பாலகிருஷ்ணன், "இது அரசின் கொள்கை முடிவில் தலையீடு இல்லையா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :