இலங்கை மாற்றுத்திறனாளி ரசிகரை திருமண வரவேற்புக்கு அழைத்த விராட் கோலி

இலங்கை மாற்றுத்திறனாளி ரசிகரை தனது திருமண வரவேற்புக்கு அழைத்த விராட் கோலி

பட மூலாதாரம், Gayan Senanayaka

மும்பையில் நேற்று நடைபெற்ற தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்விற்கு, இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் ரசிகர் ஒருவரை விருந்தினராக அழைத்ததால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

வரவேற்பு நிகழ்வின் போது, மாற்றுத்திறனாளி ரசிகர் கயன் சேனநாயகே ஷெர்வானி ஆடையில் பிரபல விருந்தினர்களுடன் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இலங்கை மாற்றுத்திறனாளி ரசிகரை தனது திருமண வரவேற்புக்கு அழைத்த விராட் கோலி

பட மூலாதாரம், Gayan Senanayaka

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் பிற விருந்தினர்களுடன் எடுத்த புகைப்படங்களை கயன் சேனநாயகே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்விற்கு கயன் சேனநாயகேவை அழைத்த விராட் கோலிக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை மாற்றுத்திறனாளி ரசிகரை தனது திருமண வரவேற்புக்கு அழைத்த விராட் கோலி

பட மூலாதாரம், Gayan Senanayaka

இலங்கை கிரிக்கெட் அணி உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு விளையாடினாலும் கயன் சேனநாயகேவை மைதானத்தில் நிச்சயம் பார்க்கமுடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :