You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி வதைகளின் எதிர்விளைவே தினகரன் வெற்றி: பழ. கருப்பையா
நரேந்திர மோதியின் வதைகளின் எதிர்விளைவாக வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன் என்று பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்துள்ளார் மூத்த அரசியல்வாதியும் திமுகவைச் சேர்ந்தவருமான பழ. கருப்பையா.
தினகரனின் வெற்றிக்கு, மோதியின் நிலைப்பாட்டை ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதே காரணம் என்றார்.
இரட்டை இலைச் சின்னத்தை மீட்டதும் தேர்தல் அறிவிப்பு வெளியானது எல்லாவற்றுக்கும் நரேந்திர மோதி பின்னணியில் உள்ளதாக குற்றம் சாட்டிய பழ. கருப்பையா, தினகரனை உருவாக்கியது மோதிதான் என்றார். அதாவது, மோதி உருவாக்க நினைத்தது எடப்பாடியை, ஆனால், உருவாக்கியது தினகரை என்றார் கருப்பையா.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி - ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் இணைந்த பிறகும் அதிமுக வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம், பாரதீய ஜனதா தமிழகத்தில் காலூன்ற ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியை உருவாக்கினாலும், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கருப்பையா கருத்துத் தெரிவித்தார்.
இந்தத் தொகுதி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட தொகுதி. மக்கள் திமுகவை கருத்திலேயே கொள்ளவில்லை. மோதிக்கு பாடம் கற்றுக்கொடுக்கவே மக்கள் இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றார் அவர்.
மக்கள் விரும்பும் அதிமுக பிரிவினை வேறு, மோடி விரும்பும் பிரிவு உண்மையான பிரிவு அல்ல. இப்போது, பலர் அணி தாவ விரும்புகிறார்கள். அரசு ஆட்டங்காணும். மக்கள் விருப்பம் வேறாக உள்ளது என்றார் அவர்.
"மேலும், 2021-ஆம் ஆண்டு வரை இந்த அரசு ஆட்சியில் நீடிக்க வாய்ப்பில்லை. இந்தத் தேர்தல் அவர்களைப் பாழாக்கிவிட்டது. பாஜகவால் ஸ்பான்சர் செய்யப்பட்டவர்கள். ஜனவரியில் ஆளுநர் உரையையும் பிப்ரவரியில் பட்ஜெட்டையும் எடப்பாடி அரசு சந்திப்பது கடினமாக இருக்கும்" என்று கருத்துத் தெரிவித்தார் பழ. கருப்பையா.
டிடிவி தினகரன் தலைமையிலும் அதிமுக நிலைக்கும் என்று தான் கருதவில்லை என பழ. கருப்பையா தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்