கே.தினகரன், ஜி.தினகரன், எம். தினகரன் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்ற நிலையில், அவரோடு களத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட மற்ற தினகரன்கள் பெற்ற வாக்குகள் என்ன என்று தொகுத்து வழங்கியுள்ளோம்.

டிடிவி தினகரன் உட்பட நான்கு தினகரன்கள் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

அதில், கே.தினகரன் 104 வாக்குகளும், ஜி. தினகரன் 56 வாக்குகளும், எம்.தினகரன் 138 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதேபோல், அதிமுக வேட்பாளர் மதுசூதன் பெயரிலும் இருவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்ற நிலையில், எஸ்.மதுசூதனன் 59 வாக்குகளும், ஆர். மதுசூதனன் 137 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

டிடிவி தினகரனை அடுத்து அதிக வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் டாக்டர் ராஜசேகர். சுமார், 862 வாக்குகளை பெற்றுள்ளார்.

அவரோடு பா.ஜ.கவை ஒப்பிடும்போது, அக்கட்சி 555 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

மிகக்குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளர் தங்கராஜ். அவர் 11 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த சுமார் 2,373 வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கலைக்கோட்டுதயம் சுமார் 3,860 வாக்குகளை பெற்று பாஜகவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இத்தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்கு பதிவாகியுள்ளது. அது திமுகவிற்கு விழுந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :