You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிலிப்பைன்ஸ் ஷாப்பிங் மாலில் தீ: 37 பேர் இறந்ததாக அச்சம்
தெற்கு பிலிப்பைன்ஸின் தவோ நகரத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 37 பேர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஷாப்பிங் மாலில் மூன்றாம் மாடியில் பற்றிய தீ, அதற்கு மேல் உள்ள மாடிகளுக்குப் பரவியதால் அங்குள்ள கால் சென்டரின் ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் "பூஜ்யம்" என தவோவின் துணை மேயர் பாவோலோ டுடெர்டே கூறியுள்ளார்.
துணை மேயர் பாவோலோ டுடெர்டேவின் தந்தையும், பிலிப்பைன்ஸ் அதிபருமான ரொட்ரிகோ டுடெர்டே சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
தவோவை சேர்ந்த அதிபர் டுடெர்டே, என்சிசிசி மாலின் வெளியே தீயில் சிக்கிக்கொண்ட நபர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார்.
தீ பிடித்ததற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்கப்பட்டுவந்த மூன்றாம் மாடியில் முதலில் தீ பற்றியது என ஷாப்பிங் மாலில் மேலாளர் ஜன்னா அப்துல்லா முத்தலிப் கூறியதாக பிலிப்பைன்ஸ் ஸ்டார் இணையதளம் கூறுகிறது.
பிற செய்திகள்
- LIVE: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - டிடிவி தினகரன் 5339 வாக்குகள் பெற்று முன்னிலை
- இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு – 10 பின்னணி தகவல்கள்
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் முன்னிலை; வைரலாகும் மீம்கள்
- திரைப்படத்தில் உருவத்தையும், நிறத்தையும் கேலி செய்வது முறையா?
- 'மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது ஆர்.கே.நகர் முன்னணி நிலவரம்' : தினகரன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்