ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி #RKNagarElectionResult

கடைசி சுற்றின் முடிவில்

5:15: கடைசி சுற்றின் முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 89013. தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் ஜெயலலிதா 39,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

5:00: பதினெட்டாவது சுற்று முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 86472

4.40: பதினேழாவது சுற்று முடிவிலும் தினகரன் முன்னிலை. அவர் பெற்றுள்ள வாக்குகள் 81315.

4.30: வெற்றியை நோக்கி தினகரன். பதினாறாவது சுற்று முடிவில் அவர் பெற்ற வாக்குகள் 76701.

4.15: பதினைந்தாவது சுற்றின் முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 72413.

4.10: தேர்தல் பார்வையாளர்கள் என்பவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள் என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சிவா கருத்து தெரிவித்தார்.

3: 55: பதினான்காவது சுற்றின் முடிவில் 68392 வாக்குகள் பெற்று முன்னிலை

3. 45: காலை 5 மணி முதல் #RKNagarElectionResults என்ற ஹாஷ்டேக் ட்வீட்டர் உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. உலகெங்கும் லட்சகணக்கான மக்கள் ட்வீட்டரில் ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

3.35: பதிமூன்றாவது சுற்றின் முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 64,984. பதிமூன்றாவது சுற்றின் முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 64,984. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகள் 33,446.

3.30: டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பு. `ஸ்லீப்பர் செல்`-ஐ சேர்த்து தங்கள் அணியில் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

3.20: தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார்.

3.15: பன்னிரெண்டாவது சுற்றிலும் டி.டி.வி. தினகரன் முன்னிலை. பன்னிரெண்டாவது சுற்றின் முடிவில் அவர் பெற்ற வாக்குகள் 60,284.

3:10: பதினோறாம் சுற்றின் முடிவில் 50,000 வாக்குகளை கடந்து டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

2:55: பத்தாம் சுற்றின் முடியில் டிடிவி தினகரன் 48,808 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 2000 வாக்குகளை கடந்து வாக்கு எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் உள்ளது.

2:40: ஒன்பதாம் சுற்றின் முடிவில் டிடிவி தினகரன்44094 வாக்குகளை பெற்றுள்ளார்.

2:00: எட்டாம் சுற்றின் முடிவில் டிடிவி தினகரன் 39548 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

1:30: ஏழாம் சுற்றின் முடிவில் 34,346 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அதிமுகவின் மதுசூதனன் 17471 வாக்குகளும், திமுகவின் மருது கணேஷ் 9206 வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் இந்தச் சுற்றில் பாஜக 500 வாக்குகளை கடந்துள்ளது.

1.00 : ஆறாம் சுற்றின் முடிவில் 29,255 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அடுத்த இடத்தில் அதிமுகவின் மதுசூதனன் உள்ளார்.

12.45: ஐந்தாம் சுற்றின் முடிவில் டிடிவி தினகரன் 24132 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 13057 வாக்குகளும், திமுக வேட்பாளர் மருது கணேஷ் 6606 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

12.10: நான்காம் சுற்றின் முடிவில் 20,298 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

11.30: மூன்றாம் சுற்றின் முடிவில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 333. பாஜகவை விட நோட்டா 100க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

நோட்டாவைக் காட்டிலும் பாஜக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது குறித்து சுப்ரமணியன் சுவாமி டிவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து

10:56: இரண்டாம் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 10,421 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரை தொடரந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 4521 வாக்குகளும், திமுக வேட்பாளர் மருது கணேஷ் 2324 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பரபரப்பு (காணொளி)

9:45: வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களுக்கும், அதிமுகவின் வேட்பாளரான மதுசூதனனனின் ஆதரவாளர்களுக்கும்,இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நி்றுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து

9:25: முதல் சுற்றின் முடிவில் டிடிவி தினகரன் 5339 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுகவின் வேட்பாளரான மதுசூதனன் 2738 வாக்குகளும், திமுக வேட்பாளரான மருது கணேஷ் 1181 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் 66 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள், ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுவதாக பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

8.45: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 224 வாக்குகள் பெற்று சுயேச்சை வேட்பளரான டிடிவி தினகரன் முன்னிலை பெற்றுள்ளார்.

இதற்கு அடுத்த நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 166 வாக்குகள் பெற்றுள்ளார்.

முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

டிசம்பர் 21-ஆம் தேதியன்று நடந்த இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஆளும் அதிமுகவின் வேட்பாளரான மதுசூதனன், திமுக வேட்பாளரான மருது கணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் உள்பட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

டிடிவி தினகரன் வென்றுவிட்டார்: சுப்ரமணியன் சுவாமி

"டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை வென்றுவிட்டதாக தெரிகிறது. எனவே 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேரும் என நம்புகிறேன்" என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் சமூக ஊடகங்களில் அவர் குறித்த மீம்கள் பரவலாக வைரலாகி வருகிறது. அதில் சில சுவாரஸ்ய மீம்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துசோழனைவிட, சுமார் 39,500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

2016ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா இறந்துவிட, 2017 ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பெரும் பணத்தை அளித்தனர் என்ற குற்றச்சாட்டில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, டிசம்பர் 21ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது இந்த இடைத்தேர்தலில் 77.48 சதவீத வாக்குகள் பதிவானது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :