You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தங்கல்' பட நடிகை ஜைரா அளித்த பாலியல் புகார் - ஒருவர் கைது
விமான பயணத்தின் போது, தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக தங்கல் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜைரா வாசிம் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று, ஜைரா டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்தது.
17 வயதான அவர், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றினை பதிவு செய்திருந்தார். அதில், விமானத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை அழுதுகொண்டே விவரிக்கிறார். விமானத்தில் தனது இருக்கைக்குப் பின்னால் அமர்ந்துகொண்டிருந்த நடுத்தர வயது ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறுகிறார்.
பாதி தூக்கத்தில் இருந்தபோது பின்னால் அமர்ந்துகொண்டிருந்த நபர், தன் பின்புறத்திலும், கழுத்திலும் தொட்டு தொந்தரவு செய்ததாக ஜைரா வாசிம் பதிவிட்டுள்ளார். விமான பணியாளர்கள் யாரும் தனக்கு உதவி செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஏர் விஸ்தாரா,''சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்தி வருகிறோம். இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை'' எனக் கூறியது.
ஜைரா வாசிம் வீடியோவில் மேலும் கூறுகையில்,'' நமக்கு நாமே உதவ முடிவு செய்யாவிட்டால், யாரும் நமக்கு உதவ முன்வரமாட்டார்கள்'' என்கிறார்.
பிற செய்திகள்:
- ''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்
- வெள்ளம் சூழ்ந்த கிராமம்: டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
- வெனிசுவேலா: அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளுக்கு தடை
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- கடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்