'நீசர்' என மோடியை விமர்சித்த மணிசங்கர் அய்யர், காங்கிரசில் இருந்து இடைநீக்கம்

பட மூலாதாரம், NICHOLAS KAMM/AFP/Getty Images
'நீசர்' என்று பிரதமர் மோடியை விமர்சித்த மணிசங்கர் அய்யர் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இத்தகவலை காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் எஸ்.சுர்ஜேவாலா தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மணிசங்கர் அய்யரின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அவர் கூறியவற்றுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தாமும் காங்கிரஸ் கட்சியும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
"பாஜகவும் பிரதமரும் காங்கிரசைத் தாக்குவதற்கு மோசமான மொழியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் காங்கிரசுக்கு உள்ள பாரம்பரியமும் பண்பாடும் வேறு. பிரதமரை விளிக்க மணிசங்கர் அய்யர் பயன்படுத்திய மொழியையும் தொனியையும் நான் ஏற்கவில்லை. காங்கிரசும், நானும் அவர் சொன்னதற்கு மன்னிப்பு கோரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ராகுல்.

பட மூலாதாரம், Getty Images
இன்று வியாழக்கிழமை அம்பேத்கர் சர்வதேச மையத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியான அம்பேத்கரின் பெயரில் வாக்கு கேட்கும் கட்சிகள் தேச உருவாக்கத்தில் அவரது பங்கை அழிக்க முயல்வதாக" கூறி, காங்கிரசை மறைமுகமாகத் தாக்கினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அந்த நிகழ்ச்சியை அரசியலுக்காக பயன்படுத்துவதை விமர்சித்த மணிசங்கர் அய்யர், மோடி இழிவான மனிதர் என்று பொருள் தரும் வகையில் "நீச் கிஸ்ம் கா ஆத்மி" என்று ஹிந்தியில் விமர்சித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் இதற்குப் பதில் அளித்த மோடி, மணி சங்கர் அய்யர் "நான் இழிந்த சாதியைச் சேர்ந்தவன்" என்று சொல்லுகிறார். "இது குஜராத்துக்கு அவமானம்," என்று கூறினார்.
"இது முகல் மனோபாவம். நல்ல ஆடைகள் அணிகள் அணிகிற மனிதர்களைக்கூட வெறுக்கும் மனோபாவம்" என்றும் கூறிய அவர், பாஜக கட்சியினரும், ஆதரவாளர்களும் மணி சங்கர் அய்யருக்கு பதில் சொல்லக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
மன்னிப்பு கேட்ட மணிசங்கர்
அவரது வார்த்தை ஓர் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தவுடன், பத்திரிகையாளர்களிடம் பேசிய மணிசங்கர் அய்யர், பிறப்பைக் குறிக்கும் சொல்லாக 'நீச்' என்பதை தாம் பயன்படுத்தவில்லை என்றும், ஆனால், அப்படிப் பொருள்கொள்ள வாய்ப்புள்ள ஒரு சொல்லை பயன்படுத்தியதற்காக உண்மையாக மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












