வல்லுறவுக்கு ஆளாகி தாயான சிறுமியின் குழந்தை: தத்தெடுத்தது மகாராஷ்டிர தம்பதி
பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி அதன் மூலம் தாயான சண்டிகரைச் சேர்ந்த பத்து வயது சிறுமியின் குழந்தையை மகாராஷ்டிரத் தம்பதி ஒன்று தத்தெடுத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆகஸ்ட் மாதம் அச்சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், அப்பெண்ணை ஏற்றுக்கொள்ள பெற்றோர் மறுத்துவிட்டனர். இதையடுத்து தாயான அச்சிறுமி ஒரு தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக அவரது மாமாக்கள் இருவருக்கு கடந்த மாதம் சிறைத் தண்டனை விதித்தது, விரைவு நீதிமன்றம் ஒன்று.
தத்தெடுத்த புதிய பெற்றோரிடம் சிறுமியின் குழந்தை ஒப்படைக்கப்பட்டது, அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் என்று தெரிவித்துள்ளார் சமூக நலத்துறை அதிகாரி ரஜினி குப்தா.
குழந்தை நலமுடன் இருந்ததாகவும், சமூக நலத்துறையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அந்தக் குழந்தை நலன் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்ததோடு, விரைவு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்வரை இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












