உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது: மூவர் பலி, குறைந்தது 9 பேர் காயம்

கோவா மாநிலத்தில் உள்ள வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் இருந்து பீஹார் தலைநகர் பாட்னா சென்ற வாஸ்கோடகாமா - பாட்னா விரைவு ரயிலின் 13 பெட்டிகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடம் புரண்டத்தில் மூவர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர்.

ரயில் தடம் புரண்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் அருகே இன்று, வெள்ளிக்கிழமை, அதிகாலை 4.18 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தில் மூன்று பேர் இறந்துள்ளதாகவும் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் சித்ரகூட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதாப் கோபேந்திர யாதவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :