குடிசைகளின் மறுசுழற்சிக் கூரைகள் எப்படி உருமாற்றுகின்றன?

மாட்யூலர் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பேனல்கள், பொருத்துவதற்கும், மாற்றுவதற்கும் எளிதாக இருக்கும்.
படக்குறிப்பு, மாட்யூலர் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பேனல்கள், பொருத்துவதற்கும், மாற்றுவதற்கும் எளிதாக இருக்கும்.
    • எழுதியவர், கரோலின் ரைஸ்,
    • பதவி, கண்டுபிடிப்பாளர்களின் தொடர், பிபிசி

''குடிசைகளுக்கும் கிராமங்களுக்கும் சென்றால், அங்கு சிக்கல் நிறைந்த சுற்றுச்சூழலை நீங்கள் காணலாம்".

இந்தியாவில், குஜராத்தில் அகமதாபாத்தில் குடிசை பகுதிகளை பார்த்த ஹசித் கணத்ரா, அவர்களின் தரமற்ற வீடுகளால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார்.

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புகளின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் 65 மில்லியன் மக்கள் குடிசை பகுதிகளில் வாழ்கின்றனர். "மனிதர்கள் வசிக்க முடியாத குடியிருப்பு பகுதி" என்று குடிசைகளை அது வரையறுக்கிறது.

இந்த கூரையை பாருங்கள். இதில் இருக்கும் ஓட்டைகளை பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்று அவர்களிடம் கேட்டால், எங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் சொல்வார்கள் "என்கிறார் கணத்ரா.

பொதுவாக தகரம் அல்லது கான்கிரீட்டால் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருப்பவர்கள் கோடையில் அதிக வெப்பத்தாலும், குளிர்காலத்தில் அதிக குளிராலும் மழைக்காலத்தில் மழைநீராலும் பாதிக்கப்படுகிறார்கள்.

தனது சொந்த ஊருக்கு திரும்பிய பொறியியல் பட்டதாரியான கணத்ரா, கூரைகள் கட்டுவதற்கான சிறந்த வழி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் வசதியாக இருப்பதை அனுமதிக்கும் நிலையான, மலிவு விலை வழியாக அது இருக்கவேண்டும்.

மோசமான நிலைமைகள்

இரண்டு ஆண்டுகளாக, 300க்கும் மேற்பட்ட முயற்சிகளை எடுத்த கணத்ராவின் நிறுவனம் மோட்ரூஃப் உறுதியான நீர்ப்புகாத மாடுலர் கூரைகளை வடிவமைத்துள்ளது. கழிவு, கூழாக்கப்பட்ட அட்டைகள் மற்றும் இயற்கை இழைகளைக் கொண்டு மாடுலர் கூரை பேனல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எங்களால் ஒருபோதும் இவ்வாறு செய்யமுடியாது என்று கூறிய சர்வதேச நிபுணர்கள், முயற்சிகளை கைவிடச் சொன்னார்கள்" என்று அவர் கூறுகிறார்

ஆனால் இதுபோன்ற சிக்கல்களை பார்த்தால், அதற்காக ஏதாவது செய்ய வேண்டும்."

தனது அடுத்த தலைமுறை பேனல்கள் சூரிய சக்தியால் செயல்படுவதாக இருக்கும் என்று நம்புகிறார் ஹசித் கணத்ரா.
படக்குறிப்பு, தனது அடுத்த தலைமுறை பேனல்கள் சூரிய சக்தியால் செயல்படுவதாக இருக்கும் என்று நம்புகிறார் ஹசித் கணத்ரா.

தனது விற்பனைக்குழுவில் பெண்களை மட்டுமே கொண்டுள்ள மோட்ரூஃப்பின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் விற்பனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். வீட்டிலேயே நிறைய நேரம் செலவிடும் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரு புதிய கூரை எப்படி மாற்றியமைத்தது என்பதை மற்றவர்களிடம் சொல்வதற்கு அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

குடியிருப்பவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்வை அளிப்பதற்காகவே இந்த முயற்சிகள் என்று சொல்கிறார் விற்பனையாளரான குஷல்யா ஷர்மா. "மக்களின் வீடுகளுக்குச் செல்லும் போது, அவர்களின் மோசமான நிலையைப் பார்த்து வருத்தப்படுவேன் என்கிறார் அவர்.

இந்த கூரை பராமரிக்க எளிதானது என்று சொல்கிறோம். அங்கிருக்கும் பலர் ஏழ்மையான நிலையில் இருப்பதால், அவர்கள் கடன் வாங்குவதற்கும் உதவி செய்கிறோம்."

சராசரியாக 250 சதுர அடி (23 சதுர மீட்டர்) கூரைக்கு 1,000 டாலர் செலவாகும். மோட்ரூஃபின் வாடிக்கையாளர்களில் 50 சதவிகிதத்தினர், மாதம் சுமார் 50 டாலர் என இரு ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையிலான குறுங்கடன்களைப் பெற்று பயனடைகிறார்கள்.

நான்கு சிறிய குழந்தைகள் உள்ள எங்கள் வீட்டில் இருக்கும் கூரைகள் வெயில் காலத்தில் அதிக சூடாக இருக்கும். அதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், மாதக் கணக்கில் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள்" என்று விளக்குகிறார் சகீனா. அவரது வீட்டில் விரைவில் புதிய கூரையை அமைக்கவிருக்கிறது மோட்ரூஃப் குழு.

காணொளிக் குறிப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டால் பெருங்கடல்களுக்கும் அச்சுறுத்தல்

உலகளாவிய நெருக்கடி

குடிசை வீடுகளை அகற்றுவதாக இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோதி உறுதி பூண்டுள்ளார். 2020 ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புறங்களில் குறைவான விலையில் 20 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், நகர்ப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு மையம் போன்ற அமைப்புகள் தற்போதுள்ள குடிசை வீடுகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

நல்ல வீட்டுக்கு முக்கியமான சிக்கலாக இருப்பது மோசமான கூரை. எனவே, மக்களுக்காக நல்ல வீடுகளை கட்டமைப்பதற்கு, சிறந்த கூரையை உருவாக்குவதும் முக்கியமான ஒன்று" என்கிறார் இயக்குனர் ரெனு சோஸ்லா.

கூரை என்பது வீட்டின் மேற்பகுதியை மறைப்பது என்பதைவிட சற்று அதிகமானது என்று நினைக்கிறார்கள் அகமதாபாதில் வசிக்கும் பல மக்கள். புதிய கூரையால், மாணவர்கள் அதிகநேரம் வெளியே செலவிட முடிகிறது என்கிறார் உள்ளூரில் பள்ளிக்கூடத்தை நடத்தும் சஞ்சய் படேல்.

குழந்தைகள் கூரை மேல் ஏறிச் சென்று பட்டம் விடுகிறார்கள், ஏன் தூங்கவும் செய்கிறார்கள். முன்பிருந்த தகரக்கூரை பயனற்றதாக இருந்தது. அப்போது குழந்தைகளை கூரை மீது அனுப்புவதற்கே அச்சப்படுவோம்" என்கிறார் அவர்.

உலகளாவிய ஆர்வம்

பேனல்களைப் பற்றி உலகம் முழுவதும் இருந்து மக்கள் எங்களிடம் விசாரிக்கிறார்கள். [மோசமான வீடுகள்] என்பது உலகளாவிய நெருக்கடி. இதுவொரு உலக நெருக்கடிதான் என்று என் மனம் சொல்கிறது."

20 ஆண்டு காலம் பயன்படும் வகையில் மோட்ரூஃப் பேனல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள குடிசைப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் இந்த கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படும் என்று கணத்ரா நம்புகிறார்.

line
bbc

பிபிசி உலகச் சேவையின் இந்த நிகழ்ச்சிக்கு நிதியளிக்கிறது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :