ஏசுவின் சீடர் என்று தன்னை அழைத்துக்கொண்டவர் மரணம்

சிறையில் எடுக்கப்பட்ட மான்சன் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறையில் எடுக்கப்பட்ட மான்சன் புகைப்படம்

சார்ல்ஸ் மேன்சன், ஒரு காலத்தில் ஒரு தனி வழிபாட்டுக் குழுவின் தலைவராக இருந்தவர். தனது சீடர்களை தொடர் கொலைகள் செய்ய சொல்லி வலியுறுத்தியவர். எதிர்கலாச்சாரம் என்று அழைக்கப்பட்ட, 1960-ல் நடைமுறையில் இருந்த சமூக மதிப்பீடுகளுக்கு எதிரான கலாச்சாரத்தின் கருப்பு பக்கத்தின் முகமாக இருந்தவர், தன்னுடைய 83 வயதில் இறந்துள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மான்சனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக பாக்கர்ஸ்ஃபீல்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மான்சன் குடும்பம்:

மான்சனின் இயக்கமானது `மான்சன் குடும்பம்` என்று அழைக்கப்பட்டது. அவர்கள் அந்த 1969-ம் ஆண்டு ஏழு பேரை கொலை செய்தார்கள்.

அவர்கள் கொலை செய்தவர்களில் ஹாலிவுட் நடிகையான ஷாரோன் டேவும் ஒருவர். கொலை செய்யபடும்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார்.

மான்சனின் சீடரான சூசன், ஷாரோனை கத்தியால் குத்தி கொன்றிருந்தார். அதுமட்டுமல்ல, ஷாரோனின் ரத்தத்தால், அவர் வீட்டுக் கதவில் 'பன்றி' என்றும் கிறுக்கிவிட்டு சென்றிருந்தார்.

மான்சன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மான்சன்

ஷாரோன் மட்டுமல்ல, அவர் வீட்டில் நான்கு பேரை மேன்சனின் சீடர் கொன்றிருந்தார். அதற்கு அடுத்தநாள், லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பணக்கார கணவன் - மனைவியான லினொ மற்றும் லாபையான்காவை இவர்கள் கொன்றிருந்தனர்.

இந்த கொலைகள் எல்லாம் மொத்தாமாக 'டேட் - லாபையான்கா' கொலைகள் என்ற பெயரில் அறியப்பட்டன.

மான்சன் இந்த கொலை சம்பவங்கள் எதிலும் நேரடியாக ஈடுப்படவில்லை என்றாலும், அவருக்கு 1971-ம் ஆண்டு மரணதண்டனை வழங்கப்பட்டது.

மாசன் உள்ளூர் நேரத்தின்படி இரவு 8.13 மணிக்கு மருத்துவமனையில் இறந்ததாக, சிறைத்துறை அதிகாரிகள் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்தனர். மான்சன் 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார்.

ஏசுவின்அவதாரம்:

தனது இளம் சீடர்களை 1960-ம் ஆண்டு அழைத்து, அமெரிக்காவில் வரவிருக்கும் இனப்போர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்றார். அந்த இனப்போரை விரைவுப்படுத்த திட்டமிட்டார்.

கருப்பு அமெரிக்கர்கள் அவர் செய்த கொலைகளுக்கு குற்றம்சாட்டப்படுவார்கள். அதனால், இன கலவரத்திற்கான பதற்றம் அதிகமாகும் என்று மான்சன் நம்பியதாக அரசு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

சிறுவயதில் மான்சன்

பட மூலாதாரம், Getty Images

தன்னை ஏசு கிறிஸ்துவின் அவதாரம் என்று மான்சன் தன் சீடர்களை நம்பவைத்தார். இதற்காக போதை மருந்துகளை பயன்படுத்தினார்.இதன் மூலம் தன் சீடர்களான மத்தியவர்க்க பெண்கள், இளைஞர்கள் மீது அதிகாரம் செலுத்தினார்.

மரண தண்டனை:

மான்சனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த இந்த 40 ஆண்டுகளில் 12 முறை மான்சன் பரோலுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்.

மான்சனை காதலித்ததாக கூறப்படும் 26 வயது பெண்ணை, திருமண செய்து கொள்வதற்கான உரிமம் சிறையில் இருந்த மான்சனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த திருமணம் நடைபெறவில்லை.

மான்சன் குறித்து பல புத்தகங்கள், திரைப்படங்கள் அமெரிக்காவில் வந்துள்ளன. இந்த படைப்புகள் மூலம் மான்சன் இன்றும் அமெரிக்க மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :