தேசிய பூங்காவின் விலங்கு பாதுகாப்பாளரைக் கொன்ற வெள்ளைப் புலி

பட மூலாதாரம், AFP
பெங்களூரில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் விலங்கு பாதுகாப்பாளர் ஒருவர், இரண்டு அரியவகை இளம் வெள்ளைப்புலிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பன்னார்கட்டா உயிரியல் பூங்காவில், சனிக்கிழமை இரவு புலிகளை அதன் இருப்பிடத்திற்கு அனுப்ப முயற்சித்துக்கொண்டிருக்கும்போது, 40 வயதான விலங்கு பாதுகாப்பாளர் கொல்லப்பட்டார்.
நான்கு உறைவிட வாயில்களுள் ஒன்று சரியாக பூட்டப்படாததால், புலிகள் அவர் மீது சீறிப்பாய்ந்ததாக ஓர் அதிகாரி கூறினார்.
வெள்ளைப்புலிகள் தங்கள் நிறத்தை ஓர் அரியவகை மரபணுவிலிருந்து பெறுகின்றன.

இந்த விலங்கு பாதுகாப்பாளர், தேசிய பூங்காவால் நியமிக்கப்பட்டு சில வாரங்களே ஆகின்றன.
கோபத்தில் இருக்கும் அவரது உறவினர்கள், பூங்கா நிர்வாகத்திலிருந்து நிதி இழப்பீடு தர வேண்டும் என்று கூறி, ஞாயிற்றுக்கிழமையன்று பூங்காவிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நிர்வாகத்தின் கவனக்குறைவால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் குற்றம் சாட்டினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு அருகே உள்ள பூங்காவில் ஒரு விலங்கு பாதுகாப்பாளர், சிங்கங்கள் தாக்கி காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












