இந்திய கார் உற்பத்தி ஆலையில் சிறுத்தை புகுந்ததால் பணிகள் இடைநிறுத்தம்
வட இந்தியாவில் உள்ள கார் உற்பத்தி ஆலையொன்றில் சிறுத்தை உள்ளே புகுந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் சிறுத்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், MAXIM ZMEYEV/AFP/Getty Images
மாருதி சுசுகி ஆலையின் நடைபாதையில் அந்த சிறுத்தை இரவு நேரத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. அது பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
ஆலையினுள் வேலை செய்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் அங்கே சிறுத்தையை மயக்க அம்பைச் செலுத்தி பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
விலங்குகளின் இயற்கை வாழ்விடங்களை சுருக்குதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவை இந்தியாவிலுள்ள பெரிய வன விலங்கினங்கள் மற்றும் மக்களிடையேயான தொடர்பை அதிகரிப்பதற்கு பெரும்பங்களித்துள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








