மருத்துவமனை முதல் மரணம் வரை ஜெயலலிதா: இதே நாளில் அன்று!

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயராம் ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே நாளில் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்களின் முடிவில் அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்ற ஜெயலலிதா பின்னர் சடலமாக அந்த இல்லத்துக்கு கொண்ட வரப்பட்ட நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உருக்கமாகப் பார்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1991 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழக முதல்வர் பதவியை அவர் பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வகித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு பிறகு அக்கட்சியில் நிலவிய பல்வேறு கோஷ்டி பூசல்களுக்கு மத்தியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அரசியல் பயணம் ஜெயலலிதா மேற்கொண்டதை வரலாறு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி சேர்க்கப்பட்டது முதல் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5-ஆம் தேதிவரை நடந்த நிகழ்வுகளின் தொகுப்பை நினைவுகூர்வோம்.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :