தகுதி நீக்கத்தை எதிர்த்து டி.டி.வி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் மனு

பட மூலாதாரம், TNDIPR
அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கமும் செய்யப்பட்டதை எதிர்த்து, அவர்கள் தரப்பிலான கூடுதல் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று செவ்வாக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் 18 சட்டமன்ற உறுப்பினர்களிடம், அந்த விவகாரம் தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க கூறி தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸை ஏற்க முடியாது என கூறி அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று திங்கள்கிழமையன்று, அந்த அ.தி.மு.கவின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி அவர்கள் அனைவரையும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருந்தது.
இது முற்றிலும் சட்டத்திற்கு எதிரான செயல் என கூறி அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் கூறப்பட்டுகிறது. இதற்கிடையே அ.தி.மு.கவிலிருந்து விலகாத தங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது தவறு என குறிப்பிட்டு, அவர்கள் தரப்பிலான கூடுதல் மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அ.தி.மு.க அரசு மீது தாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்றும், முதலமைச்சர் மீது மட்டுமே நம்பிக்கை இழந்துள்ளதாக கூறியதாகவும் அவர்கள் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அ.தி.மு.கவிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைந்தாலோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் மட்டுமே தங்கள் மீது இது போன்ற நடவடிக்கையை தொடர முடியும் என்பதால், இந்த வழக்கில் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












