``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா``- யாரைச் சொல்கிறார் கமல்?

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், ``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.`` என நடிகர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

ஜெயலலிதா தலைமையில் ஒரே கட்சியாக இருந்த அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு மூன்று அணிகளாக உடைந்தது.

இந்நிலையில், சசிகலா தலைமையிலான அணியை ஒதுக்கிவிட்டு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

மக்கள் பிரச்சனைகளை மறந்து, அணிகளை இணைப்பதிலே இரு அணியினரும் முக்கியமாக கருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசனும், தற்போதைய அதிமுக தலைமையிலான அரசில் ஊழல் அதிகரித்துள்ளதாக டிவிட்டரில் கூறியதுடன், முட்டை ஊழலுக்கான ஆதாரங்களையும் அம்பலப்படுத்தினர்.

இதனாலே, கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது.

இந்நிலையில் கமல் தற்போது டிவிட்டரில் தெரிவித்த கருத்து ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :