You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டியர் மிஸ்டர் மோதி ஐ லவ் யூ - மோஷே
இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஜெருசலேம் நகரில் ஒரு சிறுவனுடன் சிறப்பு சந்திப்பை மேற்கொண்டார்.
2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த யூத சிறுவன் 'மோஷே'தான் பிரதமர் சந்தித்த சிறப்பு விருந்தினர். 2008 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் யூதர்களின் சபாத் இல்லத்தை தாக்கியபோது, குழந்தை மோஷே, தனது பராமரிப்பாளரால் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டான்.
இப்போது 11 வயதாகும் மோஷே, இஸ்ரேலின் அஃபூலாவில் தனது தாத்தா, பாட்டியோடு வசிக்கிறான்.
ஜெருசலேமில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் முன்னிலையில், மோஷே, நரேந்திர மோதிக்கு தான் எழுதிய கடிதத்தை வாசித்தான்.
''டியர் மிஸ்டர் மோதி, நான் உங்களையும், இந்தியாவையும் நேசிக்கிறேன். எனக்கு விளையாட பிடிக்கும். ஒரு நல்ல மாணவனாக இருக்க முயற்சி செய்கிறேன். ப்ளீஸ், நான் உங்களை நேசிப்பதைப் போலவே என்னையும் நீங்கள் நேசியுங்கள். நான் மும்பை வருவேன் என்று நம்புகிறேன்…''
சிறுவனின் அன்பில் நெகிழ்ந்த பிரதமர் மோதி, மோஷே எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு வரலாம் என்று நம்பிக்கையூட்டினார்.
உத்திசார் விஷயங்களை பாதுகாக்க ஒப்புதல்
சிறுவனை சந்திப்பதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு பேசிய மோதி, ''மேற்கு ஆசிய நிலைமை மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய நிலைமை குறித்து விவாதித்தோம்''. ''இந்தியா சமாதானம், பேச்சுவார்த்தை, நிதானப்போக்கில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறது'' என்று தெரிவித்தார்.
''வன்முறை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. இரு நாடுகளின் உத்திசார் நலன்களை பாதுகாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளும் தொழில்துறை ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்காக $ 4 மில்லியன் நிதியத்தை உருவாக்க இணங்கியுள்ளன'' என்று பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
பிற செய்திகள்
- 2ஜி வழக்கில் ஆகஸ்ட் 25-க்குப் பிறகு தீர்ப்பு
- கத்தார் நெருக்கடி: சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் கெய்ரோவில் சந்திக்கின்றன
- அமெரிக்கா-தென் கொரியா கூட்டாக நடத்திய ஏவுகணை சோதனை
- 3 எம்.எல்.ஏ.க்களை கிரண்பேடி நியமித்ததால் புதுச்சேரியில் புயல்
- சமூக ஊடகங்களில் `மீம்' விளம்பரங்கள்: இது ஒரு டிஜிடல் வியூகம்!
- எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புதிய புத்தகம்
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்