சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் ஒரு கடையிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஜக்காரியா காலனியில் ராமலிங்கம் அண்ட் கோ என்ற பெயரில் சினிமா படப்பிடிப்புகளுக்கு உடைகளை வாடகைக்கு அளிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்தக் கடையில் பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று காலையில் கோடம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அந்தக் கடையைச் சோதனையிட்டனர். அந்த சோதனையில் இந்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பெட்டிபெட்டியாக கண்டெடுக்கப்பட்டன.

இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் பல கோடி ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது. இதையடுத்து, அருகில் உள்ள அந்தக் கடையின் உரிமையாளர் தண்டபாணியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதற்குப் பிறகு, தண்டபாணியிடம் இந்தப் பணம் யாரிடமிருந்து அவருக்குக் கிடைத்தது, எதற்காக அவர் அந்தப் பணத்தை வாங்கினார் என்பது குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது. கைப்பற்றப்பட்ட பணத்தின் சரியான மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












