You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை அருகே ஜெர்மன் பெண் சுற்றுலா பயணி மீது பாலியல் தாக்குதல்
தமிழகத்தில் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனிய நாட்டு பெண்மணி மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்ததியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட பெண்மணியிடமிருந்து பெற்றுள்ள மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட அந்த ஜெர்மனிய நாட்டு சுற்றுலா பெண் 38 வயது மிக்கவர் எனவும், அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருந்த கடற்கரையில் சூரியகுளியல் எடுத்துக்கொண்டிருந்த போது, அவரை மூன்று பேர் கடத்தி சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக அந்த பெண் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
அந்த புகாரின் அடிப்படையிலான விசாரணைகளை துவக்கியுள்ள காவல்துறையினர், இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் விரைவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், இந்தியாவில் உள்ள ஜெர்மனிய நாட்டு தூதகரத்திலும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஜெர்மனிய தூதரக அதிகாரிகளும், தமிழக காவல்துறையினரின் விசாரணைகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை கவனித்து வருவதாக தெரிகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடமும் ஜெர்மனிய தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை காலை விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் முறையாக கிடைக்க தமிழக காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தொடர்ச்சியாகவே மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது, இது போன்ற பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களும், சமூக ஆர்வலகர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரோந்து பணிகளில் ஈடுப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்