சிவகாசி அருகில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 5 பேர் பலி
சிவகாசி அருகில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், மூன்று பெண்கள் உள்பட குறைந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகில் வெற்றிலையூரணி என்ற பகுதியில் அமைந்திருக்கும் நாகமுத்து ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசுத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக காலை 11 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இடிபாடுகளிலிருந்து தற்போதுவரை ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த மேலும் 4 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குக் கொண்டுசெல்லும்போது ஏற்பட்ட உராய்வில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமாயின.
விபத்து நிகழ்ந்த போது அந்த தொழிற்சாலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர். தற்போது, விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் துவங்கியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












