சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ல் இடைத்தேர்தல்

சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல், ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை ஒட்டி, அந்தத் தொகுதி காலியாக இருந்த நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 12-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மார்ச் 16-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்படும். அன்று முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். 23-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 24-ஆம் தேதி அவை பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள், மார்ச் 27.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவில் ஓர் அதிருப்தி அணி உருவாகியுள்ளது. அக் கட்சியின் புதிய பொதுச் செயலரான சசிகலா , சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார்.

இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்