சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, எவ்வாறு இடைக்காலப் பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் என்று விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் உள்ளதால், அவர் தங்கியிருக்கும் பெங்களூரு சிறைக்கு அந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதில் சசிகலா அளிக்க வேண்டும் என்றும் அவர் பதில் அளிக்காத சமயத்தில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலாவிடம் இருந்து பிரிந்து வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் அணியில் உள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன் மற்றும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள இரண்டு புகார்களை அடுத்து தான் இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













