ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா சாதனை
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, இந்தியா புதிய வரலாற்று சாதனையை உருவாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தற்போது செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களில் மூன்றை தவிர மற்ற அனைத்தும் வெளிநாடுகளை சேர்ந்தவை. 96 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானவை.
இந்த வெற்றிகரமான முயற்சியால், 2014 ஆம் ஆண்டு 39 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து செலுத்திய ரஷ்யாவை விட இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
செல்பேசி சேவை, இணைய சேவை வழங்குவோர் மற்றும் நாடுகளின் அரசுகள் சிறந்த தகவல் தொடர்பை விரும்புவதால், செயற்கைக்கோள்களை கட்டணம் செலுத்தி விண்ணில் செலுத்துவது வணிக திறனுடையதாக வளர்ந்து வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












