"கறுப்பு பணத்தை வணங்குவோர்" தான் ரூபாய் நோட்டு விவகாரத்தை விமர்சிப்பர் - மோதி
தான் திடீரென அறிவித்த சர்ச்சைக்குரிய பண மதிப்பு நீக்க கொள்கையை விமர்சிப்போரை "கறுப்பு பணத்தை வணங்குவோர்" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Dan Kitwood/Getty Images
இந்திய பொருளாதாரத்தில் ஊழல் புரையோடி போயிருப்பதாக வெளிநாட்டு இந்தியர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மோதி தெரிவித்தார்,
நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோதி திடீரென அறிவித்தபோது, நாணய நெருக்கடியை இந்திய அரசு ஏற்படுத்தியது.
2020 ஆம் ஆண்டுக்குள் பணம் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் பண அட்டைகள் மூலம் பணம் செலுத்துவது ஆகியவற்றை ஒழித்துவிட்டு, அவற்றிற்கு பதிலாக பயோமெட்ரிக் (உயிரளவையியல்) அமைப்புக்களை அமைப்பதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளதாக அரசின் கொள்கை நிறுவனத்தின் தலைவர் அமிதாபா காந்ட் இதே நிகழ்வில் பேசியுள்ளார்.








