You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொழிலதிபர் சேகர் ரெட்டியை கைது செய்தது சிபிஐ
தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் உறுப்பினருமான சேகர் ரெட்டியை, சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை இன்று (புதன்கிழமை) கைது செய்துள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை குறித்து படிக்க: தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி, சேகர் ரெட்டி, அவரது சகோதரர் ஸ்ரீநிவாசலு மற்றும் அவர்களது கூட்டாளி பிரேம் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இந்தச் சோதனைகள் சில நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன. சோதனையின் முடிவில் ஒட்டுமொத்தமாக 136 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 34 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டாக கிடைத்தது.
மேலும், 177 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் கிடைத்தன.
தமிழக தலைமை செயலகத்தில் நடந்த சோதனை குறித்து படிக்க: தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில், சேகர் ரெட்டியும் அவரது சகோதர் ஸ்ரீநிவாசலுவும் இன்று கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜனவரி 3-ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
சேகர் ரெட்டி விசாரணையில் தந்த தகவலையடுத்தே தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.