தேசிய சரக்கு மற்றும் சேவை வரி குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிலவும் முரண்பாடு
இந்தியாவில் தேசிய சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளைசரிசெய்வதற்காக நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் எதுவும் இன்றி முடிவுற்றது.

பட மூலாதாரம், Getty Images
திட்டமிட்டப்படி அடுத்த ஏப்ரல் மாதம் இந்த வரி அமலுக்கு வரவேண்டும் என்றால், இந்திய நாடாளுமன்றம் மற்றும் 29 மாநில சட்டப்பேரவைகள் ஒப்புதல் வழங்கியிருக்க வேண்டும்.
இந்திய நிதியமைச்சர் அரூண் ஜேட்லி பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஐந்து வருட இழப்பீடு திட்டம் உள்ள போதிலும் தங்களின் வருமானங்கள் குறைந்து விடும் என மாநில அரசுகள் அஞ்சுகின்றன.
தற்போதைய பேச்சுவார்த்தையில் எம்மாதிரியான முடிவு ஏற்பட்டாலும், அரசியலமைப்பு திருத்தத்தின் படி தற்போதைய சிக்கலான மற்றும் மறைமுக வரிகளின் அதிகாரமற்ற அமைப்பு அடுத்த செப்டம்பரில் காலாவதியாகவுள்ளது








