"500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் விவகாரம் மோதியின் சூதாட்டம்" - சீன அரசு செய்தித்தாள்

இந்தியாவின் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது, இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் "ஒரு சூதாட்டம்" என்று சீனாவின் அரசு ஊடகம் விவரித்திருக்கிறது.

1000 ரூபாய் நோட்

பட மூலாதாரம், Getty Images

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு முன்னதாக பொது மக்களின் ஆதரவை பெறுவதற்கு மோதி தவறிவிட்டார் என்று குளோபல் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

பரவலான அளவு பொது மக்களின் ஆதரவோடு செயல்படுத்தப்படுவதாக அது கூறுகின்ற சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்களாடு, இதனை ஒப்பிட்டு இந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த தீர்மானத்தை ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி இந்திய அரசு நியாயப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.