ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஒரு புறம்: ஆடம்பர திருமணம் மறு புறம்
தென் இந்திய மாநிலமான கர்நாடகாவில், அம்மாநில முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமண வைபவம் உலகின் மிக ஆடம்பர திருமணங்களில் ஒன்றாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், JANARDHANA REDDY FAMILY
பெங்களூரூவில் இன்று நடக்கும் ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணத்தில் 74 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், JANARDHANA REDDY FAMILY
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதது என்று இந்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்ததிலிருந்து பல மில்லியன் மக்கள் பணப்புழக்க நெருக்கடியால் சிரமப்படும் போது, இந்த திருமணத்துக்கு செய்யப்படும் பகட்டான செலவு சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
தனது செல்வ செழிப்பு குறித்து ஜனார்த்தன ரெட்டி செய்துள்ள வெறுப்பூட்டுகிற காட்சி நிகழ்வு என்று விமர்சகர்கள் இந்த திருமணம் குறித்து விவரித்துள்ளனர்.

பட மூலாதாரம், JANARDHANA REDDY FAMILY
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்பு கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி தற்போது பிணையில் உள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ஜனார்த்தன ரெட்டி மறுத்துள்ளார்.








