உகாண்டா: "மணமகளுக்கு சீர் கொடுப்பது சட்டவிரோதமில்லை"

திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணுக்கு மணமகன் பொருட்களோ, பணமோ கொடுப்பது சட்டவிரோதமில்லை என உகாண்டா நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மணமுறிவின்போது, கணவன் தந்த சீரைத் திரும்பத் தரத் தேவையில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, மணமுறிவின்போது, கணவன் தந்த சீரைத் திரும்பத் தரத் தேவையில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மணமகன் பசுக்கள், நிலம், பணம் போன்றவற்றை மணமகளுக்கு அளிக்கும் வழக்கமானது அரசியல் சாஸனத்திற்கு விரோதமானதில்லையென பெரும்பான்மையான நீதிபதிகள் முடிவெடுத்தனர்.

ஆனால், அந்தத் திருமணம் முறிந்துபோனால் அந்தப் பணத்தை திரும்பத்தருவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

கணவன் அளித்த சீரைத் திரும்பத் தர வேண்டியிருந்தால், அது மனைவியின் விவாகரத்துப் பெறும் உரிமையை மீறும் செயலாக அமையும் என சமூகசெயற்பாட்டாளர்கள் வாதிட்டுவந்தனர்.

இம்மாதிரி மணமகளுக்கு பணம் அளிப்பதால், கணவர்கள் தங்கள் மனைவிகளை சொத்துக்களைப் போல நடத்துவதாகவும் அடித்துத் துன்புறுத்துவதாகவும் சில குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன.