சீனாவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு - தங்களது செயல்பாடுகளை நிறுத்திய பெரு நிறுவனங்கள்

Jilin province has been one of the worst affected by the latest Covid outbreak in China

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த பன்னாட்டு நிறுவங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த கட்டுபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் ஜிலின் மாகாணமும் ஷென்சென் நகரும் அடங்கும்.

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா, வோக்ஸ் வேகன், மற்றும் ஆப்பிளுக்கு பொருட்களை விநியோகிக்கும் ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவங்கள் இந்த கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளால் முக்கிய விநியோக சங்கிலி பாதிக்கப்படும் என கவலைகள் எழுந்துள்ளன.

சீனாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகபட்சமாக 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான தொற்று எண்ணிக்கை ஜிலின் பகுதியில் பதிவானது.

சீனாவின் வட கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் சுமார் 24 மில்லியன் மக்கள் கடந்த திங்கள் கிழமை முதல் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

ஆரம்பகாலத்தில் ஹுவான் மற்றும் ஹேபே மாகாணத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட பிறகு, தற்போதுதான் ஒரு முழு மாகணத்திற்கும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஜிலின் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாகாணத்தை விட்டு வெளியில் செல்ல விரும்புபவர்கள் காவல்துறையிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டும் .

சீனாவின் தெற்கில் உள்ள ஷென் ஷென் பகுதியில் வசிக்கும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீதான அமலுக்கு வந்த 5 நாட்கள் ஊரடங்கிற்குப் பிறகு அப்பகுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. சுரங்கப்பாதை சேவைகள் மூடப்பட்டன.

சீனாவில் 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஷென் ஷென் நகரில் ஊரடங்கு விதிக்கப்பட்ட பிறகு ஜிலின் மாணத்தின் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

Corona virus

பட மூலாதாரம், Getty Images

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நிறுவங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தி உள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி சேவை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரலாம்.

ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐஃபோன்களை தயாரிக்கும் ஃபாஸ்கான் நிறுவனம் ஷென் ஷெனில் தனது பணியை நிறுத்தியுள்ளது.

இருப்பினும் சீனாவின் வேறு பகுதிகளில் இருக்கும் தனது நிறுவனங்களை கொண்டு இதை சரி கட்ட முயற்சிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் சங்சுனில் தனது பணியை நிறுத்தியுள்ளது.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, ஜிலின் மாகாணத்தில் உள்ள சங்சுன் நகரில் தன்னுடைய ஆலையை காலவரையின்றி மூடியுள்ளதாக அறிவித்து உள்ளது.

பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோல்க்ஸ்வேகன் ச்சங்ச்சுன் பகுதியில் உள்ள தனது ஆலைய மூடியுள்ளது. இதனால் வோல்க்ஸ்வேகன் மற்றும் ஆடி கார் உதிரிபாகங்கள் உற்பத்தி இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே வியாழக்கிழமை நிறுவனத்தை திறக்க இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீனா அதன் தீவிரமான கொரோனா கட்டுப்பாடு கொள்கையின் மூலம் தொற்றுக்களின் எண்ணிக்கையை குறைத்து உள்ளது.

இருப்பினும் இப்போது வேகமாக பரவும் ஒமிக்ரான் திரிபு சீன அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

Corona virus

பட மூலாதாரம், Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: