You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹார்வி மில்க்: ஒருபாலுறவுக்காரர் பெயரை கப்பலுக்குச் சூட்டிய அமெரிக்க கடற்படை
ஆண் ஒருபாலுறவினர் உரிமை செயற்பாட்டாளராக இருந்த ஒருவரின் பெயரை அமெரிக்க கடற்படை ஒரு கப்பலுக்கு வைத்துள்ளது. 1950களில் அவருடைய பாலியல் உணர்வு காரணமாக, அமெரிக்க கடற்படையிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டு, பணியில் இருந்து விலக வைக்கப்பட்டவர் ஹார்வி மில்க்.
யு.எஸ்.என்.எஸ் ஹார்வி மில்க் (USNS Harvey Milk ) என பெயர் சூட்டப்பட்ட அமெரிக்க கடற்படைக் கப்பல் சான் டியாகோவில் சனிக்கிழமை செயல்படத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கடற்படை செயலர் கார்லோஸ் டெல் டோரோ மற்றும் ஹார்வி மில்கின் மருமகன் ஸ்டூவர்ட் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
அவர்களோடு முன்னாள் தலைமை நீதிபதி எர்ல் வாரன் மற்றும் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ராபர்ட் கென்னடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க மக்கள் உரிமைக்காகப் போராடிய தலைவர்கள் பெயர் சூட்டப்பட்ட ஆறு கப்பல்களில் இதுவும் ஒன்று.
கொரிய போரில் நீர்மூழ்கிக் கப்பல்களை மீட்கும் யூ.எஸ்.எஸ் கிட்டிவேக் (USS Kittiwake) கப்பலில் துணைத் தளபதியாகவும் டைவிங் அதிகாரியாகவும் பணியாற்றினார் ஹார்வி மில்க்.
ஹார்வி மில்க் 1955ம் ஆண்டு அவரது பாலியல் உணர்வு தொடர்பாக இரு வாரங்கள் விசாரிக்கப்பட்டு, பணியில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.
அமெரிக்காவில் மிக வெளிப்படையாக ஒருபாலுறவுக்காரராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் ஹார்வி மில்க். 1977ம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோ போர்ட் ஆஃப் சூப்பர்வைசர்ஸ் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஓராண்டுக்குப் பிறகு, முன்னாள் நகர கண்காணிப்பாளர் டான் ஒயிட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரோடு ஹார்வி மில்குக்கு அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹார்வி மில்க் கடற்படையில் பணியாற்றியபோது, தன் வாழ்கையின் மிக முக்கியமான காலகட்டத்தை மறைத்துக் கொண்டு வாழ கட்டாயப்படுத்தப்பட்டது தவறு என அந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படை செயலர் டெல் டோரோ கூறினார்.
"நீண்ட காலமாக, லெஃப்டினன்ட் ஹார்வி மில்க் போன்ற கடற்படையினர் கவனிக்கப்படாமல் இருளில் வைக்கப்பட்டனர் அல்லது அதை விட மோசமாக நடத்தப்பட்டனர், நமக்கு மிகவும் விருப்பமான கடற்படையிலிருந்து அவர் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார்" என டெல் டோரோ கூறினார். "அந்த நியாயமற்ற விஷயங்களும் நம் கடற்படையின் வரலாற்றில் ஒன்று" எனவும் கூறினார்.
2016இல் பராக் ஒபாமா அதிபராக இருந்த போது, ஓர் அமெரிக்கக் கடற்படைக் கப்பலுக்கு ஹார்வி மில்கின் பெயரைச் சூட்டுவதற்கான அறிவிப்பு வெளியானது. அப்போதே அதை சிலர் எதிர்த்தனர்.
அமெரிக்கா வியட்னாமில் போர் நடத்தியதை எதிர்த்த ஹார்வி மில்க், தன் பெயரை ஓர் அமெரிக்க கடற்படை கப்பலுக்குச் சூட்டுவதை மறுத்திருப்பார் என அவர்கள் காரணம் கூறினர்.
பிற செய்திகள்:
- காலநிலை மாற்றத்துக்கு காரணமான துறையின் 503 பேர் COP26 மாநாட்டில் பங்கேற்பு
- திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ஏன்? தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கும் அதிர்ச்சிப் பின்னணி
- இன்ஸ்டாகிராம்: வரமா, சாபமா?
- ஆப்கானிஸ்தானை நம்பிய இந்தியக் கனவு தகர்ந்தது
- சென்னையில் கனமழை; 2015ஆம் ஆண்டு திரும்புகிறதா?
- சராசரி மனிதருக்கு உரியதை போல 30 மடங்கு கார்பன் உமிழும் 1% பணக்காரர்கள் - ஆய்வில் அம்பலம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்