You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போர்களின் வரலாறு மாறியிருந்தால் உலக வரைபடம் எப்படி இருக்கும்?
பெரிய தேர்தல்கள், போர்கள், நிகழ்ச்சிகள் வேறு மாதிரி அமைந்தால் எப்படி இருக்கும்? மாறுபட்ட உலகங்களை நமக்கு காட்டும் விரிவான மற்றும் மகிழ்வான வரைபடங்கள் பற்றி சாமுவேல் அர்பெஸ்மன் விவரிக்கிறார்.
கொந்தளிப்பு மற்றும் கிளர்ச்சிகள் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், மாறுபட்ட வரலாறு என்ற கற்பனை உலகில் நான் மூழ்கினேன். உலகை மாறுபட்ட பாதையில் பார்க்கக் கூடிய வகையில், ``அப்படி இருந்தால் என்னாகும்'' என்பது போன்றதாக இவை இருக்கின்றன.
ஒரு போர், தேர்தல் அல்லது ஒரு கொலை மாறிப் போயிருந்தால், அல்லது முக்கியமான ஒரு நபர் பிறக்காமலே போயிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற வகையிலானதாக அது இருக்கிறது.
The Man in the High Castle நாவலில் உள்ளது போல, நாஜிக்கள் முறியடிக்கப்படாதிருந்தால், For All Mankind-ல் உள்ளது போல, நிலவில் சோவியத் நாட்டவர்கள் முதலில் தரையிறங்கி இருந்தால் - எப்படி இருந்திருக்கும்?
அறிவியல் கற்பனை கதையின் இன்னொரு பகுதியாக இவை இல்லை. "மாறுபட்ட வரலாறு" என்பது தீவிர ஆராய்ச்சிக்கு உரியதாக மாறியுள்ளது.
அனுமானங்களை ஆய்வு செய்யும் பணியில் வரலாற்றாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருப்பதால், இந்த நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையில், alternatehistory.com போன்ற இணையதளங்களில் பற்றாளர்கள் குவிந்து, ஸ்டார் ட்ரெக் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்படங்கள் வராதிருந்தால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை எப்படி இருந்திருக்கும் என்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் அல்லது உலகின் போக்கை மாற்றிய விஞ்ஞானிகள் சற்று மாறுபட்ட பாதையை தேர்வு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என அறியும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
மாற்று டைம்லைன்களில் நிகழ்வுகள் பற்றிய விக்கிபீடியா பக்கங்களை எப்படி உருவாக்குவது என்பது குறித்த பின்னூட்டங்களும் இணையதளத்தில் காணப்படுகின்றன.
ஆனால் மாறுபட்ட வரலாறுகள் குறித்த ஆழ்ந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம் அதன் வரைபடங்கள் (மேப்கள்) ஆகும். சில நேரங்களில், தகவல்களை விவரிப்பதாக அல்லது உலகைப் பற்றி சொல்லப்படும் அனுமானமான தகவல்களை மேம்படுத்துவதாக அவை உள்ளன. ஆனால் பல சமயங்களில் மேப் மட்டுமே விஷயங்களைக் கூறுபவையாக உள்ளன.
The Yiddish Policeman's Union என்ற நாவலை எழுதிய மைக்கேல் சாபோன் இந்த மேப்களின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் Sitka in Alaska-ன் மாற்று பதிப்பாக உள்ளது.
``சிட்கா மற்றும் சுற்றுப்பகுதியின் விரிவான வரைபடங்களை மிக அழகாக உருவாக்கும் பணியில் சிக்கியிருப்பேன் என உணர்ந்தேன்'' என்று சியாட்டில் டைம்ஸ் -க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். ``எனவே நான் வெறுமனே பென்சில் ஸ்கெட்ச்கள் மட்டும் வரைவதுடன் நிறுத்திக் கொண்டேன். எல்லாம் எங்கே நடந்தது என்று காணும் முயற்சியில் நிறைய தேடுவதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் அது இருந்தது'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரைகள் உண்மையானது என்ற தோற்றத்தைத் தரும் வகையில் கற்பனையாக வரைபடங்களை உருவாக்குவதை சாபன் குறைகூறுகிறார். இந்த உலகங்கள் மாறுபட்டவை. அப்படியானவை இருக்கக்கூடும். இதன் நுணுக்கங்களை உருவாக்குவதில் நாம் நிறைய நேரத்தை செலவிட்டு அதில் எளிதாக சிக்கிக் கொள்ள நேரிடும் என்று அவர் கூறுகிறார். யதார்த்த வாழ்க்கைக்கு அந்த வரைபடங்கள் தேவையற்றது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், இந்த உலகங்களில் நாம் வாழ்வதாக, அந்த நிலப் பகுதிகளில் பயணிப்பதாக, கற்பனையான நாடுகள் அல்லது நகரங்களில் திளைத்திருப்பதாக, நம் வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என யோசித்துக் கொண்டு நடிப்பதில் மகிழ்ச்சி இல்லையா என்கிறார் அவர்.
இதுபோன்ற வரைபடங்கள் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் புதிய கோணத்தில் பார்க்க உதவியாக இருக்கும். உதாரணமாக, எந்தவொரு மாற்று வரலாறும் பன்முக விஷயங்கள் கொண்டதாக, திட்டமிடல் இல்லாமல் அனுமானமாக உருவாக்கியதாக இருக்காது. உண்மையான மாஸ்டர்கள் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளைத்தான் உருவாக்குவார்கள். தங்களுடைய படைப்புகளுக்குப் பொருத்தமானதாக பல வரைபடங்களை தயாரிப்பார்கள். ராபர்ட் சோபல் எழுதிய For Want of A Nail என்ற மாறுபட்ட வரலாறு குறித்த பாடப்புத்தகத்தில் அப்படி ஒரு காட்சி உள்ளது. அமெரிக்க புரட்சியில் அமெரிக்கா அழிந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று அதில் விவாதிக்கப்படுகிறது. அல்லது, 1970களில், கலகக்காரர்களை பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நசுக்கி இருந்தால் என்னவாகி இருக்கும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சோபலின் கற்பனையான வட அமெரிக்காவின் படங்களை கீழே நீங்கள் காணலாம். அரசியல் எல்லைகள் எப்படி உருவாகி இருக்கும் என்று சாதாரண அனிமேசனை இன்டர்நெட்டில் யாரோ உருவாக்கி இருக்கிறார். கண்டறிந்து கொள்ளும் நிலைக்கு அப்பாற்பட்டு, சிறிய மாற்றங்களுடன் இருந்திருக்கலாம் என அது அனுமானிக்கிறது.
"1,000 Week Reich," குறித்து அமெச்சூர் வரைபட ஆர்வலர் ஆய்வு செய்துள்ளார்.
``உண்மையான'' நாஜி வெற்றி சூழல் என்று அதைக் குறிப்பிடுகிறார்கள். ``அடிப்படையில், 1941 தொடக்கத்தில் பிரிட்டனுடன் ஜெர்மனி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது. பெரிய முயற்சிக்குப் பிறகு சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் வெற்றி பெறுகிறது. பிரிட்டனும் அமெரிக்காவும் நெருக்கமான கூட்டு சேர்ந்து தங்களை எதிர்க்க தயாராகும் நிலையில், கிழக்கு ஐரோப்பாவில் பல ஆண்டுகளாக கொரில்லா முறையிலான உள்நாட்டுப் போரை எதிர்கொள்கிறது. உள்நாட்டுப் போர் உருவாகி 1950களின் மத்திய காலம் வரை நீடிக்கிறது. நாஜிகளின் ஐரோப்பா மெல்ல மெல்ல சரிகிறது. மேற்கத்திய நாடுகள் நேரடியாக தலையிட்டது அதன் முடிவுக்குக் காரணமாக அமைகிறது.'' நாஜி சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது.
இந்த சூழல்களை உருவாக்கியவர் ஏராளமான வரைபடங்களை உருவாக்கியுள்ளார். கற்பனையான உலகை அவர் படைத்துள்ளார். 2019ல் நான் பார்த்த ஜனநாயகக் குறியீட்டு உலக மேப்பில் இருந்த மிகவும் சர்ச்சைக்கு இடமளிக்கும் காட்சிப் படத்தை நான் பார்த்தேன். அதில் நிறைய விரிவான தகவல்கள் இருந்தன, நமது வரலாற்றுக்கு இணையானதாக இருந்தது.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் 1867-ல் அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நிகழ்வை கற்பனையாக உருவாக்கியுள்ள மற்றொரு வரலாற்றுப் படத்தை நான் பார்த்தேன். அமெரிக்காவில் இருந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறையை இந்த வரலாறு நினைவுபடுத்துவதாக உள்ளது. 2018 அமெரிக்க தேர்தல் போன்ற (கீழே பார்க்கவும்) குறித்த விக்கிபீடியா பக்கத்தைப் போல கற்பனையாக உருவாக்கப் பட்டிருந்தது, உண்மையானது போல இருந்தது, விக்கிபீடியா வசதிகளை, உண்மையான புகைப்படங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன, ஆனால் நமது உலகில் இருந்து பெரிதும் மாறுபட்டதாக இருந்தது.
ஜனநாயக குறியீட்டு உலக வரைபடம் மற்றும் இந்த கற்பனையான விக்கிபீடியா பக்கம் ஆகியவை, இதுபோன்ற பல வரைபடங்களில் தகவல்களை சேர்ப்பதில் உள்ள கவனம் மற்றும் ஆர்வத்தைக் காட்டுவதற்கு உதாரணங்களாக உள்ளன. இதில் உள்ள தகவல்களைவிட, எந்த அளவுக்கு ஈர்ப்பாக உருவாக்கப் பட்டுள்ளன என்பதுதான் இதன் விசேஷான அம்சமாகும்.
உதாரணமாக, The Economist இதழில் இருந்து உருவாக்கப்பட்ட மாறுபட்ட வரலாற்று வரைபடம் கீழே உள்ளது. இரண்டாம் உலகப் போர் நடந்திராவிட்டால் மத்திய கிழக்கு நாடுகள் எப்படி இருந்திருக்கும் என்ற கோணத்தில் அது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல மாறுபட்ட வரலாறு குறித்த சிந்தனைகளுக்கு இரண்டாம் உலகப் போர் தான் உந்துதலாக இருக்கிறது. ஆனால் உண்மை அல்லாமல், பலவாறான அனுமானங்களின் அடிப்படையில் நிறைய நாவல்கள் வெளியிட்ட ஹாரி டர்ட்டில்டோவ் இதை விசித்திரமாகக் கையாண்டிருக்கிறார். மாற்று வரலாற்றில் Alien Space Bats (வேற்றுக் கிரக வௌவால்கள்) என்ற பிரிவு அதில் ஒன்றாக இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது வேற்றுக் கிரகத்தினர் பூமியின் மீது படையெடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அது பேசுகிறது. எட்டு நாவல்களில் இந்த சிந்தனை பற்றி விரிவாக விவாதிக்கப் படுகிறது. கிரகங்களுக்கு இடையிலான பயணம் குறித்த அறிவியல் கற்பனை சிந்தனைகள், வெவ்வேறு உயிரினங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி வேகம், வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஊர்வன இனத்தைச் சேர்ந்த இந்த உயிரினங்கள் நாஜி ஜெர்மனியை தாக்கி பேரழிவை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும், அல்லது மனிதர்களுக்கும் வேற்றுக் கிரக உயிரினங்களுக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனையாக இவை அமைந்துள்ளன.
ஆனால் மிக சமீபத்திய நூற்றாண்டுகளைப் பற்றிய எழுத்துகளும் உள்ளன. கருப்பு மரணம் காலத்தில் ஐரோப்பாவில் மூன்றில் ஒரு பகுதியினர் மரணம் அடைந்ததற்குப் பதிலாக ஏறத்தாழ ஒட்டுமொத்த ஐரோப்பாவுமே அழிந்து போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று The Years of Rice and Salt நாவலில் கிம் ஸ்டான்லி ராபின்சன் கற்பனை செய்திருக்கிறார்.
அந்த வெற்றிடத்தில் உலகின் மற்ற நாகரிகங்கள் எப்படி நுழைந்திருக்கும்? தொழில்நுட்பமும், கலாச்சாரமும் எப்படி வளர்ந்திருக்கும், உலகப் போர்களின் முடிவுகள் எப்படி அமைந்திருக்கும்? அந்தக் கதையில் இருந்து உருவாக்கிய, வரைபடத்தை நீங்கள் இங்கே காணலாம். இந்த கற்பனை உலகம் பற்றிய எனக்குப் பிடித்த விவரங்களில், சான் பிரான்சிஸ்கோ வளைகுடாவில் உருவாகும் அந்த நகரம் பிடித்துள்ளது. இயற்கையான அந்தப் பகுதியை மறந்துவிட முடியாது.
இருந்தாலும், வரலாற்றில் பன்முகத்தன்மை என்பதை மட்டும் விட்டுவிட முடியாது. உதாரணமாக, அமெரிக்க வரலாற்றில் மாநிலங்களுக்கு நிறைய திட்டங்கள் இருந்துள்ளன, ஒருபோதும் அவை செயல்பாட்டுக்கு வந்தது இல்லை. ஆனால் அவை வெற்றி பெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? 124 மாநிலங்களாக இருந்திருக்கும். கீழே உள்ள வரைபடம் பெரிய அளவிலான அரசியல், வரலாறு மற்றும் அமெரிக்கர்களின் மனப்போக்கை ஒரே படத்தில் காட்டுவதாக உள்ளது. ஒரே பெயர் கொண்டதாக இருந்தாலும், தனித்துவம் மற்றும் பிரிந்த நிலை செயல்பாட்டை வலியுறுத்தும் நாடாக அமெரிக்கா இருக்கிறது.
அல்லது வரலாறு குறித்த தேடலில் உள்ள பின்வரும் வரைபடத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அன்னா கல்கேட்டரா என்ற உயர்நிலைப் பள்ளி மாணவி உருவாக்கிய மாறுபட்ட பார்வையாக இது உள்ளது. கனடா வரையில் டெக்சாஸ் எல்லையை அந்தப் பெண் விஸ்தரித்திருக்கிறார். ``ஓஹியோ 2'' என்ற புதிரான பகுதியை சேர்த்துள்ளார். மின்னேசோட்டாவை கிழக்கு டகோட்டா என்று பெயர் மாற்றியுள்ளார். இது மாதிரி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற, நம்பமுடியாத உலகின் விநோதமான புரிதல்கள் குறித்து சிந்திக்க வேண்டும். இந்த வரைபடத்தை நீங்கள் பார்த்தால், இங்கே என்ன நடந்தது என்று கேட்கும் கட்டாயத்துக்கு ஆளாவீர்கள்.
வரலாறு நேர்க்கோட்டிலான பயணமாக இருப்பதில்லை. அல்லது தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய விஷயமாக இருப்பதில்லை. அது குழப்பங்கள் நிறைந்தது: பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சிறிய மாறுதல்களைக் கொண்டதாக இருக்கிறது. பல மாற்றங்கள் பெரிய விஷயமாக இல்லாதவையாகவும் இருக்கலாம். 2020-ன் நிகழ்வுகள் போன்ற தடங்கல்கள் நிறைந்த காலங்களில், இந்த உலகம் எப்படி இருக்கும் என யூகிப்பது சிரமமானதாக இருக்கும். தெளிவான சூழ்நிலை இல்லாதபோது, நடைமுறையில் இல்லாத உலகங்களின் வரைபடங்களை பார்ப்பதில் நாம் மகிழ்ச்சி அடையலாம்.
பிற செய்திகள்:
- சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்
- "சூரரைப் போற்று" கேப்டன் கோபிநாத்தின் கதை என்ன?
- நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களோடு போரிட்டார்களா?
- பிகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திற்குச் சொல்வது என்ன?
- அமெரிக்க அதிபராகவுள்ள பைடனின் முன்னோர்கள் தமிழகத்தில் வாழ்ந்தார்களா?
- உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மரணம்: யார் இவர்?
- குறையும் ஸ்டிரைக் ரேட்: தேர்தல்களில் காங்கிரஸ் துணையா, சுமையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: