You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களுடன் போரிட்டார்களா? 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?
- எழுதியவர், நிக்கோலஸ் ஆர் லாங்ரிச்
- பதவி, பிபிசி
40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போனதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது மனித மூதாதையர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்கள் அழிந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பரிணாம உயிரியல் வல்லுநர் நிக்கோலஸ் லாங்ரிச் தெரிவித்துள்ளார்.
சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி, நம்முடைய மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. இன்னொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் எனப்படும் நியாண்டர்தால்களாக மாறியது. அவர்கள் நம் முன்னோர்கள் அல்ல (சிறிதளவு கலப்பு இனப்பெருக்கம் நடந்தது மட்டும் விதிவிலக்கு). சகோதர உயிரினக் குழுவாக நமக்கு இணையாக பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள்.
நம்மைப் பற்றி, நாம் யார், நாம் எப்படி மாறினோம் என்பது பற்றியெல்லாம் கூறுவதைக் கேட்கும் போது, நியாண்டர்தால்கள் நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றனர். இயற்கையுடன் இயைந்து, பரஸ்பரம் அமைதியாக வாழ்ந்த அவர்களுடைய ரம்மியமான சூழலை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. அப்படியானால் எல்லைகளை உருவாக்கிக் கொள்வது, வன்முறை போன்ற மனிதகுலத்தின் கேடுகளாக இருப்பவை எல்லாம் உள்ளார்ந்த குணாதிசயங்கள் கிடையாது, நவீன காலத்தில் ஏற்பட்டவை என்று இருக்கலாம்.
இருந்தபோதிலும் உயிரியல் மற்றும் தொல்லுயிரியல் தகவல்கள் மாறுபட்ட தகவல்களை அளிக்கின்றன. அமைதியானவர்கள் என்பது மட்டுமின்றி, திறமையான போர்த் திறன் கொண்டவர்களாக, ஆபத்தான போர் வீரர்களாக, நவீன காலத்து மனிதர்களை மட்டுமே போட்டியாளர்களாகக் கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
நிலம் வாழ் பாலூட்டிகளாக இருந்து அழிந்து போன அவர்கள் எல்லை சார்ந்து வாழ்ந்துள்ளனர், குழுவாகச் சென்று வேட்டையாடி வந்துள்ளனர். சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் ஹோமோ சேபியன்கள் (மனிதர்கள்) போல, நியாண்டர்தால்களும் பெரிய வேட்டைகளில் கூட்டு சேர்ந்து ஈடுபடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். மற்ற உயிரின வேட்டையாடும் இனங்கள், உணவுச் சங்கிலியில் மேலே இருக்கக் கூடிய இனங்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்பவையாக இருந்திருக்கலாம். இதனால் வேட்டைக் களங்களுடன் அதிக எண்ணிக்கையிலான வளர்ச்சி என்பது முரண்பட்டதாக இருக்கிறது. நியாண்டர்தால்களுக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது. அவர்களின் எண்ணிக்கையை மற்ற இனங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவர்களுக்குள்ளாகவே மோதல் ஏற்படுகிறது.
எல்லைகள் வரையறுத்தல் என்பது மனிதனிடம் வேரூன்றியுள்ள ஒரு விஷயம். நமக்கு நெருக்கமான உறவுகளான சிம்பன்சிகளுடனும் எல்லை வரையறை மோதல் இருந்திருக்கிறது. ஆண் சிம்பன்சிகள் கூட்டமாக சேர்ந்து கொண்டு, பகை குழுவில் ஆண் கூட்டத்தைக் கொன்றுவிடும். இது மனிதர்கள் போரிட்டுக் கொல்வதைப் போன்ற பழக்கத்தைப் போன்றதாக இருக்கிறது. குறைந்தபட்சம் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிம்பன்சிகளின் முன்னோர்கள் மற்றும் நம் இனத்தவர்களிடம் குழுவாக சேர்ந்து போரிடும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று இதன் மூலம் தெரிய வருகிறது. அப்படி இருந்தால், நியாண்டர்தால்களும், கூட்டாக சேர்ந்து சண்டையிடுவது என்ற இந்த மனப்போக்கை பெற்றிருக்க வேண்டும்.
போரிட்டுக் கொள்வது என்பது மனிதனின் இயல்பான குணமாக இருக்கிறது. இது நவீன காலத்தில் உருவானது கிடையாது. நம் மனிதகுலத்தின் பழமையான அடிப்படை குணமாக இருந்திருக்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், எல்லா மக்களும் போரிட்டிருக்கிறார்கள். நமது மிகப் பழங்கால எழுத்துப் பதிவுகள் போர் பற்றிய கதைகள் நிரம்பியதாக இருக்கின்றன. பழங்கால கோட்டைகள் மற்றும் போர்கள், வரலாற்றுப் பதிவுக்கு முந்தைய கால கொலைகள் ஆகியவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவையாக இருக்கின்றன என்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
போரிடுவது மனித குணம் - நியாண்டர்தால்களும் நம்மைப் போன்றே இருந்துள்ளனர். அதிசயத்தக்க வகையில் நம்முடைய மண்டை ஓடுகளும், எலும்புக்கூடு அமைப்பும் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. நம் டி.என்.ஏ.க்கள் 99.7 சதவீதம் ஒரே மாதிரி இருக்கின்றன. அதியசத்தக்க வகையில் நியாண்டர்தால்கள் நம்மைப் போலவே இருந்திருக்கின்றனர். அவர்கள் தீ மூட்டியிருக்கிறார்கள், இறந்தவர்களைப் புதைத்திருக்கிறார்கள், கடல் சிப்பிகள் மற்றும் விலங்கு பற்களால் ஆன ஆபரணங்களை அணிந்திருக்கிறார்கள். கலை வேலைப்பாடுகள் செய்திருக்கிறார்கள், கல் வழிபாட்டு தலங்களை உருவாக்கி இருக்கிறார்கள். நம்முடைய இயல்பான பல குணங்கள் நியாண்டர்தால்களிடமும் இருந்துள்ளன என்றால், அழிவை ஏற்படுத்தும் நம் இயல்பான குணமும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
நியாண்டர்தால்களின் வாழ்க்கை அமைதியானதாகவே இருந்துள்ளது என்று தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
நியாண்டர்தால்கள் தீவிர வேட்டையாளர்களாக இருந்திருக்கிறார்கள். மான், மலையாடு, கடமான், காட்டெருமை, காண்டாமிருகம் மற்றும் பெரிய விலங்குகளையும் வேட்டையாடுவதற்கு ஈட்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். தங்களின் குடும்பத்தினருக்கோ, நிலத்திற்கோ ஆபத்து ஏற்பட்டாலும் இவற்றைப் பயன்படுத்த தயக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்குவதாக இவை உள்ளன. இதுபோன்ற மோதல்கள் சாதாரணமாக நிகழ்வுகளாக இருந்துள்ளன என்று தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலையில் அடித்துக் கொல்வதற்கு தண்டாயுதம் சிறந்த ஆயுதமாக இருந்திருக்கிறது. அதை வேகமாக, வலிமையாக, துல்லியமாகத் தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். தலையில் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் இனமாக மனிதர்கள் இருந்துள்ளனர். நியாண்டர்தால்களும் அப்படியே இருந்திருக்கிறார்கள்.
தாக்குதல்களைத் தடுக்கும் போது கையின் முன்பகுதி எலும்பில் ஏற்பட்ட முறிவுகள் மற்றொரு அறிகுறியாகக் கருதப்படுகிறது. நியாண்டர்தால்களின் ஏராளமான முன்கைகளில் நிறைய முறிவுகள் காணப்படுகின்றன. இராக்கில் ஷானிடர் குகையில் எடுக்கப்பட்ட ஒரு நியாண்டர்தால் எலும்புக் கூட்டின் மார்பில் ஈட்டி செருகப் பட்டிருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி ஏற்படுத்தும் தாக்குதல் நடப்பது, இளம் நியாண்டர்தால் ஆண்களுக்கு சாதாரணமானதாக இருந்திருக்கிறது. மரணங்களும் அப்படியே இருந்திருக்கின்றன. சில காயங்கள் வேட்டையின் போது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இனங்களுக்கு இடையிலான மோதல்களில் அதிக காயங்கள் ஏற்பட்டதற்கான தடயங்கள் இருக்கின்றன. சிறிய அளவிலான சண்டையாக இருந்தாலும், தீவிரமானதாக, நீண்ட பகை கொண்டதாக இருந்திருக்கின்றன. கொரில்லா பாணியிலான தாக்குதல்கள், மறைந்திருந்து தாக்குவது போன்றவை இருந்திருக்கின்றன.
போர்களால் எல்லையில் சிறிய தடயங்கள் உருவாகும். போர்களில் நியாண்டர்தால்கள் சிறந்து விளங்கினார்கள், அவர்கள் நம்மை சந்தித்த நிலையிலும் உடனடியாக தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்பதற்கான சிறந்த ஆதாரங்கள் உள்ளன. மாறாக சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள், நவீனகால மனித இனத்தின் பெருக்கத்தை நியாண்டர்தால்கள் தாக்கு பிடித்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற நமக்கு ஏன் அவ்வளவு நீண்ட காலம் தேவைப்பட்டது? சுற்றுச்சூழல் ஏற்புடையதாக இல்லை என்பது காரணமாக இருக்காது. ஆனால் நியாண்டர்தால்கள் ஏற்கெனவே ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வந்தது காரணமாக இருக்கலாம்.
நியாண்டர்தால்களை மனிதர்கள் சந்தித்து, தாங்களும் வாழ்ந்து, அவர்களையும் வாழ விடுவது என்பதற்கான வாய்ப்பு இல்லை. வேறு எதுவும் இல்லாவிட்டாலும் கூட, மனிதர்களின் மக்கள் தொகை பெருகப் பெருக, வேட்டையாடி பிள்ளைகளுக்கு உணவு தேடுவதற்கு தங்களுக்குப் போதிய நிலப்பரப்பு தேவை என்பதால், நிறைய நிலப்பகுதிகளை மனிதர்கள் வசப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் தீவிரமான போர்த் தந்திரங்களும்கூட, பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தன.
மாறாக, பல ஆயிரம் ஆண்டுகளாக, அந்த இனத்தின் வீரர்களுடன் மோதியிருப்போம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தோற்றிருப்போம். ஆயுதங்கள், உத்திகள், நுட்பங்களில் ஏறத்தாழ நமக்கு இணையான திறன்கள் கொண்டவையாக அவை இருந்திருக்கும்.
அநேகமாக நியாண்டர்தால்களுக்கு உத்திகள் மற்றும் நுட்பங்களின் சாதகங்கள் இருந்திருக்கும். பல மில்லியன் ஆண்டுகளாக மத்திய கிழக்குப் பகுதிகளை அவர்கள் வசப்படுத்தி வைத்திருந்திருக்கலாம். அந்த நிலப்பரப்பு குறித்தும், பருவநிலை குறித்தும், தங்கள் வாழ்விடப் பகுதி தாவரங்கள் மற்றும் விலங்குகளுடன் வாழ்வது பற்றி அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்திருப்பார்கள். போரில், அவர்களுடைய பிரமாண்டமான, கட்டுமஸ்தான உடல் அமைப்பு, அவர்களை தீவிரமான வீரர்களாக ஆக்கியிருக்கும். அவர்களுடைய பெரிய கண்கள் குறைவான வெளிச்சத்திலும் நல்ல பார்வைத் திறனை தந்திருக்கும். அதனால் இருளிலும்கூட தாக்குதல்கள் நடத்தும் திறன்கள் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்.
இறுதியாக, இந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்து, காற்றின் திசை மாறியது. ஏன் என்று நமக்குத் தெரியவில்லை. அநேகமாக அதிக புதிய ஆயுதங்கள் - வில் அம்புகள், ஈட்டி எறிவோர்கள், தண்டாயுதங்களை வீசுவோர் - உருவானது காரணமாக இருக்கலாம். தாக்கிவிட்டு, ஓடிவிடும் உத்தியைக் கையாண்டு நியாண்டர்தால்களை மனிதர்கள் துன்புறுத்தி இருக்கிறார்கள். அல்லது மனிதர்களின் நல்ல வேட்டைத் திறன் மற்றும் உத்திகளைக் கையாளும் திறன் ஆகிய காரணங்களால், போரில் எண்ணிக்கை அளவில் ஆதிக்கம் பெற்றிருக்கலாம்.
பூர்வகுடி மனிதர்கள் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்றாலும், நியாண்டர்களை எதிர்த்துப் போரிட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் கிரீஸ் நாட்டில், நியாண்டர்தால்களின் எதிர்தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான் மனிதர்கள் நுழைந்திருக்கிறார்கள். 1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறுதியாக நடந்த மோதலில் நியாண்டர்தால்கள் அழிக்கப் பட்டுள்ளனர்.
நியாண்டர்தால்கள் அமைதியை நாடுபவர்கள் அல்லது குறைந்த திறன் கொண்ட போர் வீரர்கள் என்று பலரும் நினைப்பது போல, இது திடீரென நடக்கவில்லை. எல்லைகளை வசப்படுத்த நடந்த நீண்டகால போராக அது இருந்திருக்கிறது. இறுதியா, நாம் வென்றிருக்கிறோம். ஆனால் அவர்கள் போரிடுவதில் அதிக நாட்டம் காட்டவில்லை என்ற காரணத்தால் அது நடக்கவில்லை. நிறைவாக, அவர்களுடைய போர்த் திறனைவிட மிஞ்சியதாக நம்முடைய போர்த் திறன்கள் இருந்தன என்பதே அதற்குக் காரணமாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: