ஜான்சன் அண்ட் ஜான்சன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனையை நிறுத்தியது ஏன்?

ஜான்சன் அண்ட் ஜான்சன்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க மருந்தக நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

பரிசோதனை நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தன்னார்வலர்களில் ஒருவர் சுகவீனம் அடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக செய்திக்குறிப்பில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது.

சுகவீனம் அடைந்த நபருக்கு என்ன நோய் பாதிப்பு உள்ளது என்பது தெளிவாகாதபோதும், "தன்னிச்சை பாதுகாப்பு குழுவும் தன்னார்வலரின் சொந்த மருத்துவரும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறோம். மூன்றாம் கட்டத்தில் இருந்த என்செம்பிள் பரிசோதனை முயற்சியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஜான்சன் அண்ட்ஜான்சன் நிறுவனத்தின் பல கட்ட பரிசோதனை நடவடிக்கையில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு முதலாவதாக வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போதைய முடிவால் அனைத்து முயற்சிகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸை தடுக்க இரண்டு முறை தடுப்பு மருந்து போடப்பட வேண்டும் என தனியார் மருந்தக தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வந்த வேளையில், ஒரே முறை மட்டுமே தடுப்பு மருந்து போதும் என்பது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் திட்டம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதேவேளை அதன் போட்டி நிறுவனங்களான ஃபிபைஸர், அஸ்ட்ராஸெனிகா, மாடர்ன் நிறுவனம் ஆகியவை சில வார இடைவெளியில் இரு முறை வைரஸ் தடுப்பு மருந்து போடும் திட்டத்தை கடைப்பிடிப்பதால் அனைவரும் தடுப்பு மருந்து போடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.

முன்னதாக, கடந்த வாரம் பிரிட்டனில் தனது தடுப்பு மருந்து திட்டத்துடன் தொடர்புடைய மருந்தக நிறுவன தடுப்பு மருந்து பெற்றிருந்த அஸ்ட்ராஸெனிகாவின் தன்னார்வலர் சுகவீனம் அடைந்ததால் அதன் தயாரிப்பு பணிகள் சில நாட்கள் இடைநிறுத்தப்பட்டு சமீபத்தில்தான் தொடர்ந்தது.

தாயார் மரணம்: தேம்பித்தேம்பி அழுத தமிழக முதல்வர் பழனிசாமி

எடப்பாடி

பட மூலாதாரம், FB

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காலமானார். இதையடுத்து சென்னையில் இருந்து தமது சொந்த ஊரான சேலத்துக்கு விரைந்த எடப்பாடி பழனிசாமி, தாயாரின் உடலைக் கண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தவசுசாயம்மாள் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்ப கவுண்டரின் மனைவியான தவசாயம்மாளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய மகன்களும் மகள் ரஞ்சிதமும் உள்ளனர்.

அவரது மறைவுச்செய்தியை அறிந்த தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தாயை பிரிந்து வாழும் எடப்பாடி பழனிசாமியின் நிலை அறிந்து மிகவம் வேதனைக்குள்ளானதாக தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், முதல்வரின் தாயாரின் மறைவுச்செய்தி அறிந்து அவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஹெர்ட் இம்யூனிட்டி சரியான அணுகுமுறை அல்ல" - டெட்ரோஸ் கெப்ரியேசூஸ்

டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசூஸ்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை மந்தை நோய் எதிர்ப்பாற்றல் மூலம் வெல்ல முடியும் என்ற கருத்தாக்கத்தை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசூஸ் நிராகரித்துள்ளார்.

ஒரு சமூகத்தின் பெரும்பகுதி தடுப்பு மருந்துகள் மூலமாகவோ அல்லது ஒரு நோயின் பரவல் மூலமாகவோ அந்த நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பெறும்போது ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படுகிறது.

முன்னதாக, ஒருவேளை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் போனால், கொரோனா வைரஸை அதன் போக்கில் பரவுவதை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசூஸ், அத்தகைய அணுகுமுறை "அறிவியல் மற்றும் நெறிமுறை அடிப்படையில் சிக்கலானது" என்றார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 3.7 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட இன்னமும் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெறவில்லை.

திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கெப்ரியேசஸ், கொரோனா வைரஸ் பாதிப்பின் நீண்டகால தாக்கங்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளிட்டவை குறித்தும் இன்னும் சரிவர தெரியவில்லை என்று கூறினார்.

"மந்தை நோய் எதிர்ப்பாற்றல் மக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதன் மூலம் அடையப்படுகிறதே தவிர, வைரஸால் ஆட்கொள்ளப்பட்ட வைப்பதன் மூலம் அல்ல" என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Reuters

"ஒரு பெருந்தொற்று பரவல் உள்பட எந்தவொரு நோய்த்தொற்று பரவலை எதிர்கொள்வதற்கும் மந்தை நோய் எதிர்ப்பாற்றல் ஒரு வழியாக இதுவரை பின்பற்றப்பட்டதில்லை."

ஒருவரது உடலிலுள்ள ஆன்டிபாடிகளை பரிசோதிக்க மேற்கொள்ளப்படும் செரோபிரெவலன்ஸ் என்ற சோதனையின் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளில் வெறும் 10 சதவீத மக்களுக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

"கொரோனா வைரஸை கட்டுப்பாடின்றி பரவ விடுவதன் மூலம் நாம் தேவைற்ற நோய் கிருமிகளை பரவ செய்ய அனுமதிப்பதால் அதனால் துன்பத்தை எதிர்கொள்வதுடன், மரணமும் ஏற்பட வழிசெய்கிறோம் என்றே அர்த்தம்."

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: