You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மார்க்சிய போராளி குழு தலைவர் பற்றி துப்பு கொடுத்தால் 37 கோடி ரூபாய் - அமெரிக்கா சன்மானம் மற்றும் பிற பிபிசி செய்திகள்
கொலம்பியாவில் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வரும் தேசிய விடுதலை ராணுவம் எனும் போராளிக் குழுவின் தலைவர் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இதன் இந்திய மதிப்பு சுமார் 37 கோடி ரூபாய் ஆகும்.
அவரைக் கைது செய்ய உதவும் தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் இந்த அறிவிப்பை அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டு இரண்டு நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது 38 வயதாகும் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் கொக்கைன் போதை பொருள் விநியோகிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
இ.எல்.என் என்று அறியப்படும் தேசிய விடுதலை ராணுவம் கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் மார்க்சியப் போராளிக் குழுவாகும்.
கொலம்பியாவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து, நிலம் மற்றும் வளங்களை சமமாகப் பிரித்து வழங்கும் நோக்கில் 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
1959இல் நிகழ்ந்த கியூபப் புரட்சியின் உந்துதலால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்ட தமிழக வெளியுறவு அதிகாரி
ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 45ஆவது கூட்டத்தில் பாகிஸ்தானின் இந்தியா விரோத செயல்பாடுகளை பட்டியலிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான செந்தில்குமார்.
விரிவாகப் படிக்க: ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய தமிழ் அதிகாரி செந்தில்குமார்
"இந்தி தெரியாதா? கடன் கொடுக்க முடியாது"
விரிவாகப் படிக்க: இந்தி மொழி சர்ச்சை: "இந்தி தெரியாதா? கடன் கொடுக்க முடியாது" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது?
ஆடை கட்டுப்பாட்டை மீறினால் அபராதம்
"கம்போடியாவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணாக, நான் பாதுகாப்பாக எண்ணி வெளியே செல்லவும், எனக்கு சௌகரியமான ஆடைகளை அணியவும் விரும்புகிறேன். நான் அணியும் உடைகள் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அது, அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை" என்று அவர் கூறுகிறார்.
விரிவாகப் படிக்க: "நான் அணியும் உடைக்காக ஏன் அபராதம் விதிக்கப்பட வேண்டும்?" - புதிய சட்டத்துக்கு எதிராக சீறும் கம்போடிய பெண்கள்
"ரவீந்திரநாத் எம்.பிக்கு தெரிந்தது அவ்வளவுதான்"
விவசாய மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, அவற்றில் உள்ள தவறுகளை விமர்சிக்க தனக்கு உரிமை உண்டு என்றும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு அவ்வளவுதான் விஷயம் தெரியும் என்றும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விரிவாகப் படிக்க: விவசாய மசோதாவுக்கு ஆதரவு: "ரவீந்திரநாத் எம்.பிக்கு தெரிந்தது அவ்வளவுதான்" - எஸ்.ஆர்.பி அளிக்கும் விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: