கொரோனா வைரஸ் மரணங்கள்: 10 லட்சம் இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்கும் மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images
பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ நாடு முடிவு செய்துள்ளது.
அந்நாட்டின் மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா மாகாணம் தெரிவிக்கிறது.
மெக்சிகோ ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிகோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன.
போலி சான்றிதழ்களை தடுக்க சான்றிதழ்கள் சிறப்பு படிவங்களில் அச்சிடப்படுகின்றன.
மெக்சிகோவில் மரண எண்ணிக்கை
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்று காலை 11 மணி நிலவரப்படி மெக்சிகோவில் கொரோனாவால் 6,37,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 67,781 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 5,31,334 பேர் மீண்டுள்ளனர்.
ஆனால், உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாகவே இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் பல மரணங்கள் கொரோனா மரணங்களாக கணக்கிடப்படவில்லை என்கின்றனர்.

பட மூலாதாரம், Reuters
கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், மெக்சிகோ நான்காவது இடத்திலும் உள்ளன.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் நிலை
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் 4,280,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 72,775பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 3,323,950 பேர் மீண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 75,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1133 பேர் பலியாகி உள்ளதாகவும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
- 'இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்
- வீட்டிலிருந்து வேலை: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் கூறுவதும், ட்விட்டர் நிறுவனத்தின் முடிவும்
- கொரோனாவில் இந்தியா 2ஆம் இடம்: Go Corona Go முதல் PMCares வரை - கடந்து வந்த பாதை
- அரியர் தேர்வுக்கு விதிமுறைகளின்படி விலக்கு அளிக்கப்பட்டதா? என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












