You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல்: 30 பேரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 16 வயது சிறுமி - கொதித்து எழுந்த மக்கள்
இஸ்ரேலில் 16 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறும் வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஒரு நபர், 30 பேர் அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டார். ஆனால், பாலியல் வல்லுறவு என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்கிறது உள்ளூர் ஊடகங்கள்
இந்த சம்பவமானது இஸ்ரேல் ஈலட் நகரத்தில் உள்ள ஒரு விடுதியில் நடந்துள்ளது.
அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்ற செயலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்த அவர், "அதிர்ச்சியாக இருக்கிறது, வேறு வார்த்தைகள் இல்லை. இது ஒரு சிறுமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல. மொத்த மனிதக் குலத்திற்கும் எதிரானது.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த பதின்மவயது சிறுமி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் தனது நண்பருடன் அந்த சிறுமி ஈலட் நகரம் சென்றதாகவும், அங்கு தனது நண்பருக்குப் பரிச்சயமான ஒரு குழுவை அவர் சந்தித்துள்ளார் என்கிறது உள்ளூர் ஊடகங்கள்.
அவர்கள் மது அருந்திவிட்டு விடுதிக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டிருக்கிறார்கள்.
சிறுமியின் நண்பர் அவரை காக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் காக்க முடியவில்லை.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீஸ் வெளியிடவில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட அனைவரும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், தங்கள் 20களில் இருப்பவர்கள் என்றும் இஸ்ரேல் ஊடகங்கள் கூறுகின்றன.
ஒருவர் அந்த சிறுமிக்கு குறுஞ்செய்து அனுப்பி உள்ளார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறது டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்திகள்.
ஆனால் அந்த நபர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் செல்பேசியைப் பயன்படுத்தவில்லை என்றும் வேறு ஒரு நபர் பயன்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த நபர்தான் அந்த பெண்ணுடன் 30 பேர் பாலியல் வல்லுறவு கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், பாலியல் உறவு அந்த பெண்ணின் சம்பந்தத்துடனே நடந்தது என்றும், விடுதியில் உள்ள சிசிடிவி கேமிரா இதனை நிரூபிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் பென்னி.
இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெறுகிறது என்று கூறி உள்ள அவர், புகார்தாரருக்கு நான் கூற விரும்புகிறேன், அவர் தனித்து இல்லை, என் அவருடன்தான் இருக்கிறது என ட்வீட் செய்துள்ளார்.
கடந்தாண்டு, தன்னை 12 இஸ்ரேலியர்கள் சைப்ரஸில் உள்ள ஒரு விடுதியில் பாலியல் வல்லுறவு கொண்டதாக 19 வயது பிரிட்டன் பெண் புகார் அளித்தார்.
ஆனால், அது பொய் புகார் என கூறியதை அடுத்து அவருக்கு நான்கு மாத தண்டனை அளிக்கப்பட்டது.
இந்த வழக்கைப் பெண் உரிமைக் குழுக்கள் கண்டித்தன. அந்த 19 வயது பெண் மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
சுவரோவியத்தை அழிக்கக் கோரிக்கை
இதற்கு மத்தியில் டெல்வ் அவிவில் உள்ள விடுதியில் இரு சிறுவர்கள் குளியலறையை எட்டிப்பார்ப்பது போல ஓவியம் வரையப்பட்டு இருந்தது. 'பீப்பிங் டாம்ஸ்' என இந்த ஓவியம் அழைக்கப்பட்டது.
இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை அடுத்து அந்த சுவரோவியத்தை அழிக்க கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.
பெண் உரிமை குழுக்கள் பல காலமாக அந்த ஓவியத்தை அழிக்க கோரிக்கை வைத்து வருகிறது.
அந்த ஓவியத்தை மறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என டெல் அவிவ் ஆளுநர் ரான் ட்வீட் செய்துள்ளார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- எஸ்.பி.பாலசுப்ரமணியம்: “கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டார்” - எஸ்.பி.சரண்
- ஆபாசப் பட நடிகைக்கு டிரம்ப் பணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
- ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா - தனி நாணயம் வெளியிட்டார் நித்தியானந்தா
- இரான் வீழ்த்திய விமானத்தின் கருப்பு பெட்டி பதிவு செய்த 19 நொடிகள்
- டிக் டாக் டிரம்ப் அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்வது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: