கொரோனா வைரஸ்: எப்போது கிடைக்கும்? யாருக்கு முதலில் கிடைக்கும்?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வரும் அதே நேரத்தில் அந்த வைரஸுக்கான தடுப்பு மருந்து குறித்த எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. கூடிய விரைவில் முழுமையான தடுப்பு மருந்து நடைமுறைக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், அதற்கான கால அளவு எவ்வளவு என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியவில்லை.

இருப்பினும், தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி முடிவுகளில் நம்பிக்கை அளிக்க கூடிய தகவல்களே கிடைத்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த நம்பிக்கை அளிக்கக் கூடிய முன்னேற்றங்கள் என்ன? எப்போதும் முழுமையான தடுப்பு மருந்து மக்களுக்கு கிடைக்கும்? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கொரோனா தடுப்பு மருந்து - இதுவரை கடந்து வந்த பாதை

வரலாற்றில் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா தடுப்பு மருந்திற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 குழுக்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதில் 18 குழுக்கள் தடுப்பு மருந்துகளை விலங்குகளின் மீதும், மனிதர்களின் மீதும் சோதிக்க தொடங்கிவிட்டன.

கடந்த மே மாதம் உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவின் மாடெர்னா மருந்து நிறுவனம் மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை நடத்தியது. இதில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 8 தன்னார்வலர்களின் உடலில், கொரோனா வைரஸ் பெருகுவதை தடுக்கும் ஆண்டிபாடிகள் உருவானதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Banner image reading 'more about coronavirus'
Banner

சீனாவில் நடந்த மற்றொரு சோதனையில், தாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இருப்பதாகவும், செயல்திறன் மிக்க ஆண்டிபாடிகளை உருவாக்க வழிவகுத்ததாகவும் அந்நாடு தெரிவித்ததாக தி டான்செட் அறிவியல் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து சீனாவின் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு, அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை, ஆக்ஸ்போர்டில் 800 தன்னார்வலர்கள் மீது தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி உருவாக்கிய தடுப்பு மருந்து விலங்குகளிடம் நல்ல பலனை அளித்ததை தொடர்ந்து,300 தன்னார்வலர்கள் மீது இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

மிகச் சமீபத்தில் ரஷ்யாவில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட்ட தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இருந்ததாகவும், அந்த மருந்தை பெருமளவு உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்து உலக சுகாதார அமைப்பு எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

எப்போது கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்?

பொதுவாகவே தடுப்பு மருந்துகளை உருவாக்க பல ஆண்டு காலம் பிடிக்கும். ஏற்கனவே கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த 4 வைரஸ்கள் மனிதர்களிடம் பரவியுள்ளன. ஆனால் தற்போது வரை இவை எதற்கும் தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை.

ஆனால் உலகிற்கே கொரோனா வைரஸ் ஆபத்தாக விளங்கி வருவதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே அடுத்த ஆண்டின் மத்தியில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

இனி செய்ய வேண்டியது என்ன?

தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவை என பரிசோதனைகள் நிரூபிக்க வேண்டும். நோயை விட தடுப்பு மருந்துகள் அதிக பின்விளைவுகளை ஏற்படுத்துமானால், அதனால் எந்த பலனும் இல்லை.

ஒருவேளை தடுப்பு மருந்து சிறப்பாக செயலாற்றினால், அதனை கோடிக்கணக்கில் உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். எனவே அதனை உலகம் முழுக்க கொண்டு செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளையும் சமாளிக்க திட்டம் தீட்டப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

எவ்வளவு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டியிருக்கும்?

தடுப்பு மருந்து எவ்வளவு திறனுள்ளதாக இருக்கும் என்பது தெரியாமல், அது எத்தனை பேருக்கு செலுத்தப்பட வேண்டும் என கூறுவது கடினம். ஒருவேளை சிறப்பான தடுப்பு மருந்து தயாராகிவிட்டால், அதனை உலகிலுள்ள 60 முதல் 70 சதவிகித மக்களுக்கு அதாவது கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டி இருக்கும்.

எல்லா வயதினரின் உடலிலும் தடுப்பு மருந்துகள் செயலாற்றும். ஆனால் வயதானவர்களின் உடலில் அதன் செயல்திறன் குறைவாக காணப்படும். ஏனெனில் வயதானவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்கனவே தொய்வு ஏற்பட்டிருக்கும் என்பதால், தடுப்பு மருந்தின் முழு வீரியமும் சென்று சேர்வதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.

ஆனால் வயதானவர்களின் உடலில் பல முறை தடுப்பு மருந்துகளை செலுத்துவதன் மூலமும் அதன் முழு வீரியத்தை சேர்க்க முயற்சிக்கலாம்.

யாருக்கு தடுப்பு மருந்து முதலில் கிடைக்கும்?

தடுப்பு மருந்து உருவாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், அதன் உற்பத்தி அளவு குறைவாகவே இருக்கும். எனவே முன்னுரிமை பட்டியல் ஒன்று உருவாக்கப்படலாம்.

குறிப்பாக மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இந்த பட்டியலில் முதலில் இருப்பார்கள். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு இரண்டாம் இடம் அளிக்கப்படலாம்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஆனால் வறிய நிலை காரணமாக வைரஸ் தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் ஆபத்துள்ள ஏழை மக்களுக்கு இந்த பட்டியலில் முன்னுரிமை அளிப்பது உலக நாடுகளின் கைகளில்தான் உள்ளது.

''கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தால், அதனை மிகப்பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய வேண்டி இருக்கும். உலக நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும். இல்லையெனில் ஏழை மக்களுக்கு இந்த தடுப்பு மருந்து கிடைக்காமலே போய்விட வாய்ப்புகள் அதிகம்''என நேஷனல் ஜியாகிராஃபிக் தளத்திற்கு பேட்டியளித்துள்ள பெருந்தொற்று மருத்துவ நிபுணரான சேத் பெர்க்லி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: