You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘முதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு’ - புதிய ஆய்வு தகவல் மற்றும் பிற செய்திகள்
பண்டைய காலத்தில் வாழ்ந்த முதலைகள் நீர்க்கோழி போல இரண்டு கால்களுடன் விரைவாக நடந்துள்ளது என கூறும் ஆராய்ச்சி முடிவுகளால் விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.
சில முதலைகள் இரண்டு கால்களில் ஓடியிருக்கலாம் என கூறும் ஆராய்ச்சி முடிவுகளை கண்டு விஞ்ஞானிகள் திகைத்துப் போயுள்ளனர்.
தென் கொரியாவில் பாதுகாக்கப்பட்ட புதைபடிவ தடங்களை (fossil tracks) ஆராய்ந்ததன் மூலம் இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
110-120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகள் குறித்து சர்வதேச குழு ஒன்று ஆராய்ச்சியில் ஈடுபட்டது. முதலைகள் குறித்து நமக்குள்ள புரிதலுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரும் சவாலாக அமைந்துள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.
இது குறித்து பிபிசியிடம் பேசிய பேராசிரியர் மார்ட்டின் லாக்ளே கூறுகையில், ''பொதுவாக முதலைகள் எந்த செயலும் இல்லாமல், நாள் முழுவதும் சோம்பலாக இருக்கும் என்றே மக்கள் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் முதலைகள் இரண்டு கால்களுடன் சுற்றி வந்தன, நீர்க்கோழி போல ஓடின என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்'' என்றார்.
ஆனால் முதலைகள் குறித்து கூறும் இந்த ஆராய்ச்சி முடிவுகளை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆய்வின் முடிவுகள் பல விவாதங்களுக்கு வழி வகுக்கும்.
நீர்க்கோழி போல இரண்டு கால்களில் நடந்ததாக கருதப்படும் பண்டைய முதலைகளின் உடல் மிச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பண்டைய கால முதலைகள் நேர் கோட்டில் நடக்கும் திறன் வாய்ந்தது என்றும் பெரும்பாலும் தலை நிமிர்ந்து நடக்கும் தோரணையை கொண்டுள்ளது என்றும் பேராசிரியர் க்யுங் சோ கிம் கூறுகிறார்.
மனிதர்கள் நடக்கும்போது பாத சுவடுகள் ஏற்படுவதுபோலவே, இந்த பண்டையகால முதலைகள் நடக்கும்போதும் தெளிவான பாத சுவடுகளை மண்ணில் பதிய செய்யும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் தனிமை
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதேபோல பரிசோதனை செய்து கொண்ட நபரின் குடும்ப உறுப்பினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவாக படிக்க:கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் தனிமை - சென்னை மாநகராட்சி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படுமா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? தளர்வுகள் நீக்கப்படுமா? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.
சமீபத்தில் கோவிட்-19 தொற்று குறித்து பேசிய மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அம்மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படலாம் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விரிவாக படிக்க:இந்தியாவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?
மருத்துவக் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய 50 சதவீத இடங்களை வழங்க மத்திய அரசு மறுத்துவருவதாகவும் அதனை செயல்படுத்த உத்தரவிட வேண்டுமென்றும் கோரி தி.மு.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.
இதுகுறித்து விரிவாக படிக்க:மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
தின்பண்டம் என எண்ணி பாறை உடைக்கும் வெடிமருந்தை கடித்த குழந்தை பலி
கேரளாவில் வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை உண்ட கர்ப்பிணி யானை உயிரிழந்தது மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் கர்ப்பமாக இருந்த பசு சாப்பிட்ட உணவில் வெடி மருந்து இருந்ததால் அதன் வாய் சேதமடைந்தது ஆகிய சம்பவங்கள் சமீபத்தில் இந்தியாவையே உலுக்கின.
அதே போன்றதொரு சம்பவம் இப்போது தமிழ்நாட்டில் ஒரு ஆறு வயது குழந்தையின் உயிரைப் பறித்துள்ளது.
இதுகுறித்து விரிவாக படிக்க:தின்பண்டம் என எண்ணி பாறை உடைக்கும் வெடிமருந்தை கடித்த குழந்தை பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: