கொரோனா வைரஸ் மருந்து: குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க திட்டமிட்ட அமைச்சர் பதவிநீக்கம் மற்றும் பிற செய்திகள்

லாலிபாப்

பட மூலாதாரம், MARCO HENZ

பள்ளி குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்குவதற்காக இரண்டு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட திட்டமிட்ட மடகாஸ்கரின் கல்வித்துறை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது 14 கோடி இந்திய ரூபாய் மதிப்பை விடவும் அதிகம்.

கொரோனா வைரஸுக்கு தீர்வாக கருதப்படும் சோதிக்கப்படாத மூலிகை சாறை மாணவர்கள் பருகிய பின்னர் அதன் கசப்புணர்வை மறக்கடிக்க செய்வதற்காக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று ரிஜசோவா அன்ரியாமனனா தெரிவித்திருந்தார்.

மடகாஸ்கரின் அதிபரிடமிருந்து எதிர்ப்பு எழவே இந்த திட்டம் கைவிடப்பட்டது.

மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா கோவிட்-ஆர்கானிக்ஸ் என்னும் ஒருவகை மூலிகை சாறை கொரோனா வைரஸ் சிகிச்சையாக ஊக்குவித்து வருகிறார்.

இந்த மூலிகை சாறு கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில் பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளும் இதை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளன.

எனினும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இதுவரை எவ்வித தடுப்பு மருந்தும் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மடகாஸ்கரின் தேசிய மருத்துவ அமைப்பும் ஆர்ட்டெமிசியா என்னும் தாவரத்தை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானத்தின் செயல்திறன் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது. இது மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடும் என்று அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

Presentational grey line

கேரளாவில் யானைகள் கொலை குறித்து மேனகா காந்தி கூறுவது உண்மையா?

மேனகா காந்தி

பட மூலாதாரம், Getty Images

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று உயிரிழந்த கோர சம்பவத்தை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான மேனகா காந்தி கேரள கோயில்களில் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

இந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் யாவும் "தவறானது" என்று யானைகள் குறித்த வல்லுநர் ஒருவரும் மற்றும் தனியார் யானை உரிமையாளர்கள் அமைப்பை சேர்ந்த ஒருவரும் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Presentational grey line

மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டாரா?

ஐ.நா

ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவரின் மகள் அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் நேற்று காலை முதல் ஒளிபரப்பிய நிலையில், அதன் உண்மை தன்மை பற்றி அலசுகிறது இந்த செய்தி.

ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த சி. மோகன், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு வந்து சலூன் கடை ஒன்றைத் துவங்கினார். இவருக்கு 9ஆம் வகுப்புப் படிக்கும் நேத்ரா என்ற 13 வயது மகள் இருக்கிறார்.

Presentational grey line

கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும் ஏன் எடுக்கவில்லை?

கோப்புப்படம்
படக்குறிப்பு, கோப்புப்படம்

கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணியின்போது, ஒரு விலங்கின் எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீழடியில் நடந்த அகழ்வாய்வில் இதுவரை கிடைத்த எலும்புத் துண்டுகளை விடப் பெரிதாக, ஒரு விலங்கின் எலும்புத் கூடு கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Presentational grey line

இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் - வழிகாட்டும் அசாம்

அசாம்

பட மூலாதாரம், Getty Images

வானத்தில் திடீர் திடீரென வெட்டி மின்னும் மின்னலும் இடியும் வானில் தோன்றும் அதிர வைக்கும் காட்சிகளாக இருந்தாலும், எப்போதாவது இவை பூமியைத் தொட்டுவிடுவதும் உண்டு.

இந்த நிகழ்வுகளில், மனிதர்கள் சிக்கி மாண்டுபோவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஒருவர் இருவர் என்று ஆங்காங்கே இடிமின்னல் தாக்கி இறந்தாலும், ஆண்டு முழுவதும் ஒரு மாநிலத்தில் இடி மின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: