பிரிட்டனில் 5000 ஆண்டுக்கு முந்தைய நெருப்புக்கோழி முட்டைகள் - விலகிய மர்மம் மற்றும் பிற செய்திகள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் இருக்கும் நெருப்புக்கோழி முட்டைகள் குறித்த மர்மத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில நெருப்புக்கோழி முட்டைகள் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டவை. ஆனால், நெருப்புக்கோழிகள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவை அல்ல என்பதால், அந்த முட்டைகள் உண்மையில் எந்தப் பகுதியை சேர்ந்தவை என்பது மர்மமாகவே இருந்தது.

தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழு, அந்தத் நெருப்புக்கோழி முட்டைகள் பற்றிய வரலாற்றைக் கண்டறிந்துள்ளனர்.

5000 ஆண்டுகளுக்கு முன், வெண்கல மற்றும் இரும்பு யுகங்களில் ஐரோப்பா, மத்திய தரைக்கடல், மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் மக்கள் நெருப்புக்கோழி முட்டைகளை வர்த்தம் செய்தது தெரிய வந்துள்ளது.

பணக்கார நபர்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் இதுபோன்ற முட்டைகள் கண்டெடுக்கப்படுவதால், அலங்கரிக்கப்பட்ட நெருப்புக்கோழி முட்டைகள் ஆடம்பரப் பொருட்களாக இருந்திருக்கலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி திட்டத்தை தலைமை தாங்கும் டாமர் ஹோடொஸ்.

அதே போல அவை காட்டில் வாழ்ந்த நெருப்புக்கோழிகளா அல்லது மனிதர்களால் வளர்க்கப்பட்டவையா என்பதை கண்டறிவதிலும் ஹோடொஸின் குழு ஆர்வமாக இருந்தது.

BRITISH MUSEUM

பட மூலாதாரம், BRITISH MUSEUM

படக்குறிப்பு, லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் நெருப்புக்கோழி முட்டைகள்.

நெருப்புக்கோழிகள் மிகுவும் ஆபத்தானவை என்பதால், அவற்றை பிடிப்பது என்பது மிக்ககடினம்.

எனினும், தற்காலத்தில் எகிப்து, இஸ்ரேல், ஜோர்டன், துருக்கி ஆகிய நாடுகளில் இருக்கும் நெருப்புக்கோழி முட்டைகளின் வேதியியல் கூறுகளை வைத்து பழைய முட்டை ஓடுகளை ஒப்பிட்டு அதன் வரலாற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அவ்வாறு ஆய்வு செய்ததில் தற்போது அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் முட்டைகள், வடக்கு எகிப்து மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் (ஜோர்டன், சிரியா மற்றும் துருக்கி உட்பட) வர்த்தகம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

அதோடு அவை காட்டில் வாழ்ந்த நெருப்புக்கோழிகளின் முட்டைகள் என்றும் அதனை எடுக்க வர்த்தகர்கள் பெரிய அபாயங்களைச் சந்தித்திருக்கலாம் என்றும் ஹோடொஸின் ஆய்வு கூறுகிறது.

"முட்டைகளை எடுப்பது மிகவும் ஆபத்தானது. நெருப்புக்கோழிகள் மிகவும் ஆபத்தானவை. முதலில் அதன் முட்டைகள் எங்கிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். பின்னர் அவற்றை திருட வேண்டும்," என்கிறார் ஹோடொஸ்.

Banner

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா?

தமிழகத்தில் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டுப் பயணமோ, கொரோனா நோயாளிகளுடன் தொடர்போ இல்லாவிட்டாலும்கூட, மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 500 பேருக்கு அந்த சோதனை செய்யப்பட்டதில், 3 பேருக்கு மட்டுமே அந்நோய் உறுதியாகியுள்ளது.

Banner

இந்தியாவில் அண்மைய தகவல் என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அண்மைய தகவல் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இந்தியாவில் மொத்தம் 5734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Banner

போலி செய்திகளும், பாதிக்கப்படும் ஏழை முஸ்லிம்களும்

கொரோனா வைரஸ் தொற்று

பட மூலாதாரம், Getty Images

Banner

கொரோனா தொற்று சிகிச்சைக்கு குணமடைந்த நோயாளியின் ரத்தம்

கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

பட மூலாதாரம், Getty Images

கோவிட்-19 (கொரோனா வைரஸ் நோய்) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கேரளம் முன்மொழிந்த கன்வேலசன்ட் பிளாஸ்மா சிகிச்சை (ஊநீர் சிகிச்சை) முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Banner

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: