ஒரு பாலுறவு தடை சட்டத்தை நீக்க சிங்கப்பூர் நீதிமன்றம் மறுப்பு மற்றும் பிற செய்திகள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

சிங்கப்பூரில் ஒரு பாலுறவு தடை சட்டத்தை நீக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவு சிங்கப்பூரில் உள்ள பாலின சிறுபான்மையினர் (எல்.ஜி.பி.டி) இயக்கத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

காலனியாதிக்க காலத்தில் இயற்றப்பட்ட ஒரு பாலுறவு தடை சட்டம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு விரோதமானது என வழக்கு தொடர்ந்த மூன்று ஒருபாலுறவினர்களின் மேல் முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சிங்கப்பூரில் "பொது மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் பிரதிபலிப்பதில் சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது," என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் சட்டப்பிரிவு 377ஏ-வின்படி, பொது வெளியில் அல்லது தனிமையில் ஒருபாலுறவினர் உறவு கொள்வது குற்றச் செயலாகவே கருதப்படும். இதற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

Presentational grey line

வளைகுடா நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

வளைகுடா நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம், எண்ணெய் வளம் அதிகமுள்ள வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில் அதிக அளவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை செய்து வருவதால், அந்த நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி உள்ளது? என்பதை அறிந்து கொள்ள மக்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்

Presentational grey line

கொரோனாவால் விவசாயத்தை முடக்க முடியுமா?

விவசாயத்தை முடக்க முடியுமா?

கொரோனா முன்னெச்சரிக்கையாக நோய்த் தொற்று பரவாமல் பாதுகாக்கப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசித்து வரும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

மலேசியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கொரோனா

பட மூலாதாரம், Rahman Roslan

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் சீராக அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவில் அத்தொற்றில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது அரசுக்கும் மக்களுக்கும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

Presentational grey line

அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாடு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது.

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது?
Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: