கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அவசர நிலை - இனி என்னவெல்லாம் நிகழலாம்? US Emergency Corona Updates

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 5,000க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 132,500 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் இந்த வைரஸ் தொற்றால் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 43 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இப்படியான சூழலில் இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அவசர நிலையை அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்தி உள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் பூங்காவில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின் போது, அடுத்த 8 வாரங்கள் நெருக்கடியான காலகட்டமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

சரி தேசிய அவசரநிலைகாரணமாக அமெரிக்காவில் இனி என்னவெல்லாம் நிகழலாம்?

  • அமெரிக்க சுகாதார செயலாளருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். சுகாதார அதிகாரிகள் சில விஷயங்களில் தன்னிச்சையாக செயல்பட முடியும்.
  • சுகாதாரம் சார்ந்த சில விஷயங்களை அரசின் முன்அனுமதி இல்லாமல் செயல்படுத்த முடியும்.
  • அவசரநிலையின் போது செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அமெரிக்க மருத்துவமனைகள் செயல்படுத்தலாம்.
  • கல்விக்கடனுக்கான வட்டி அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படும்.
  • அமெரிக்க மத்திய அரசு 50 பில்லியன் டாலர் பணத்தை அவசரகால மீட்புக்காகப் பயன்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எப்படி?

இதற்கு முன்பாக இப்படியான அவசரநிலை எப்போது அறிவிக்கப்பட்டது?

2009ஆம் ஆண்டு பன்றி காய்ச்சல் பரவிய போது தேசிய சுகாதார அவசர நிலையை ஒபாமா பிரகடனப்படுத்தி இருந்தார்.

வெஸ்ட் நைல் வைரஸ் பரவிய போது, பில் கிளிண்டன் அமெரிக்காவின் வட கிழக்கு பகுதிக்கு மட்டும் தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: