You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளமதி எங்கே? - “சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் கொரோனா பரவட்டும்”: ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து கடத்தப்பட்ட இளமதியின் நிலை தற்போதுவரை என்னவென்று தெரியவில்லை. காவல்துறையினரும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், #இளமதி_எங்கே என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
சேலம் மாவட்டம் கொளத்தூரில், கடந்த 9ஆம் தேதி, செல்வன், இளமதி என்ற காதல் ஜோடியினர் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அந்த காதல் ஜோடிகளையும், திருமணத்தை நடத்திவைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தினரையும் கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியதோடு, பெண்ணையும் கடத்திச்சென்றது.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கும் நிலையில், 4 நாட்கள் கடந்தும் இன்னும் அந்தப் பெண் மீட்கப்படவில்லை. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேற்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசினார். இப்படியான சூழ்நிலையில் இளமதி எங்கே? என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த ஹாஷ்டேகின்கீழ், இதுவரை மூன்றாயிரத்திற்கும் அதிகமான ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர், செல்வன். பவானி குருப்பநாயக்கம்பாளையம் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண், இளமதி. இருவரும் ஒரே கம்பெனியில் வேலைபார்க்கும்போது பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, இருவரும் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.
பிற செய்திகள்:
- கொரோனாவால் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம், இந்தியாவில் மேலும் ஒருவர் பலி- 10 தகவல்கள்
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் - என்ன காரணம் தெரியுமா?
- மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வில் கொரோனா நோயாளி: பலருக்கும் பரவி இருக்கலாம் என அச்சம்
- கொரோனாவால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: